சிங்கப்பூரில் 44 வயதான பிரெஞ்சு நாட்டவரான ஜீன்-லூக் கா வு ஹான் இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 21) தானாக முன்வந்து ஒரு சிறுவனுக்கு காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட அந்த 13 வயது சிறுவன், தனது 12 வயது சகோதரனுடன், பார்க்லேன் ஷாப்பிங் மாலில் உள்ள தனது தந்தையின் அலுவலகத்தில் இருந்ததாகவும். நவம்பர் 22, 2019 அன்று இரவு உணவு உன்ன கீழே செல்ல முடிவு செய்தபோதுஇந்த சம்பவம் நடைபெற்றதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சம்பவத்தின்போது அந்த சிறுவர்கள் 10 வது மாடியிலிருந்து லிப்டில் கீழே உணவு உண்ண சென்றுள்ளார். அந்த லிப்ட் 5வது மாடியில் நின்றுள்ளது. அங்கு வு ஹான் தனது நண்பரான 41 வயது நபருடன் அந்த லிப்டில் எறியுள்ளார். லிப்டுக்குள் நுழைந்த பிறகு, முன்பு குடிபோதையில் இருந்த வு ஹான், பாதிக்கப்பட்டவரிடம் அவரது அந்தரங்க பாகங்கள் குறித்து ஒரு கேள்வியைக் கேட்டார் என்று கூறப்படுகிறது. உடனடியாக அந்த சிறுவன் எதிர்மறையாக பதிலளித்துள்ளார்.
உடனடியாக பாதிக்கப்பட்டவரிடம் தன்னுடைய அந்தரங்க உறுப்பை பார்க்கிறாயா? என்று கேட்க அச்சிறுவன் மீண்டும் இல்லை என்று பதிலளித்துள்ளார். திடீரென, வு ஹான் சிறுவனை கையால் குத்தியுள்ளார். இதனால் நிலைதடுமாறி விழுந்ததில் அவரது கையை லிஃப்ட்டின் ஹேண்ட்ரெயிலில் மோதியது. உடனடியாக மேற்கொண்டு அவர் அடிக்காமல் இருக்க அந்த சிறுவனும் அந்த மனிதனின் கையை பிடித்துள்ளார். இறுதியாக அவர்கள் முதல் மாடிக்கு வந்தபோது, வு ஹானின் நண்பர் அவரை லிப்டில் இருந்து வெளியே தள்ளினார், ஆனால் வு ஹான் வெளியேற மறுத்துவிட்டார். அவர் தனது காலால் லிப்ட் கதவுகளைத் தடுத்து, பாதிக்கப்பட்டவரின் கன்னத்தில் ஆராய்ந்துள்ளார்.
லிப்டில் நடந்ததை பார்த்த கீழ் தலத்தில் அமர்ந்திருந்த ஒருவர் அருகில் இருந்த காவலர்களை அழைத்தார். அதன் பிறகு அந்த நபர் கைது செய்யப்பட்டார்.