TamilSaaga

சிங்கப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து – விரைந்து அணைத்த SCDF

திரு ஆங் மியோ தாண்டின் வேலையில் இருந்த போது, அவர் வசிக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு தீப்பிடித்து எரிந்ததாக அவரது மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது. இதையடுத்து வேலையில் இருந்த அவர் அச்சத்தில் வீட்டிற்கு விரைந்தார்.

“நான் உடனடியாக வீட்டிற்கு வந்தேன்,” என்று 51 வயதான மின் பொறியாளர் கூறினார்.

ஸ்டோர்ரூமில் ஏற்பட்ட தீவிபத்தால், புதன்கிழமை பிற்பகல் (அக். 20) அன்று அந்தத் தொகுதியில் உள்ள 60 -க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) அன்று பிற்பகல் 2.45 மணியளவில் பிளாக் 470 சோ சூ காங் அவென்யூ 3 இல் ஏற்பட்ட தீ குறித்து அறிவிப்பை பெற்றது.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

எஸ்சிடிஎஃப் அதன் அதிகாரிகள் வருவதற்கு முன்பே குடியிருப்பில் நான்கு பேர் வெளியேறிவிட்டதாகக் கூறினர்.

ஒருவருக்கு லேசான காயங்கள் இருந்தும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்தனர். SCDF அந்த நபரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

திரு ஆங் மியோ தாண்டின் மனைவி, மேடம் கின் மியோ தாந்த், தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம், இந்த சம்பவத்தின் போது தனது கையில் சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

தீ ஏற்பட்டபோது அவர் மூன்று குழந்தைகளுடன் பிளாட்டில் இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குடும்பம் மியான்மரைச் சேர்ந்தது மற்றும் ஏழாவது மாடியில் இருக்கும் அந்த குடியிருப்பை வாடகைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டோர் ரூமில் தீப்பிழம்புகளை முதன்முதலில் கண்டறிந்த மேடம் கின் மியோ தாண்ட், அங்கு பாடப் புத்தகங்கள் மற்றும் ஆடைகள் சேமித்து வைக்கப்பட்ட பொருட்களில் இருந்தது என கூறினார்.

ஐந்து வயதுடைய தனது இளைய மகன் எரிவாயு லைட்டரை வைத்திருப்பதை அவள் கவனித்தாள் என்று திரு ஆங் மியோ தாந்த் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts