இந்த ஆண்டு முறையே ஜனாதிபதியின் வழிகாட்டி விருது (PGA) மற்றும் ஜனாதிபதியின் சாரணர் விருது (PSA) வழங்கப்பட்ட 5 பெண் வழிகாட்டிகள் மற்றும் 23 துணிகர சாரணர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாக்கோப். நேற்று நடந்த விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கி அவர் கௌரவித்தார்.
இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் துவாஸ் தெற்கு தெருவில் பரவிய தீ”
மேலும் அவர் கூறுகையில் : “விருதுகள் பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், அவர்கள் அனைவரும் இந்த சவாலான காலங்களிலும் சமூகத்திற்கு தன்னலமின்றி சேவை செய்வதில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளனர்”. “பல இளைஞர்கள் அவர்களால் ஈர்க்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன், மேலும் அவர்கள் தொடர்ந்து மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.