சோஃபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த ஆண்டு தனது 19 வயதில் கர்ப்பமாக இருப்பதை அறிந்தபோது, அவரது பெற்றோர் அவளுக்கு ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்தனர். “ஒன்று அந்த கருவை கலைத்துவிடு, அல்லது திருமணம் செய்” என்று.
அவள் திருமணத்தை தேர்வு செய்தாள்.
ஆனால் சோஃபியும், அவரை விட ஐந்து வயது அதிகம் கொண்ட காதலனும் ஒரு பெரிய சண்டைக்குப் பிறகு திருமணத்திற்கு முன்பே பிரிந்தனர்.
சோஃபி கர்ப்பமாக இருப்பதை அறிந்தபோது தனது காதலன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், ஆனால் அவரது பெற்றோர் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். இதனால் ஏற்பட்ட தகராறில் காதலன் விட்டுச் செல்ல நொறுங்கிப் போனார் சோஃபி.
அதன் பிறகும், தந்து பெற்றோர் கருக்கலைப்பு செய்யச் சொன்னதை சோஃபியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“என் குழந்தை இறப்பதை நான் விரும்பவில்லை” என்ற சோஃபி குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தார். கடைசி கடைசி வரை ஒத்துக் கொள்ளாததால், பெற்ற மகளை வீட்டை விட்டு வெளியேற்றினர். அப்போது சோஃபி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். இத்தனைக்கும் அவளுடைய பெற்றோர், இருவரும் தொழில் வல்லுநர்களாக இருந்தனர்.
“வாழ்க்கையின் மிக மோசமான நிலையில், என் பெற்றோர் என்னை வெளியேற்றியபோது கைவிடப்பட்ட உணர்வை நான் உணர்ந்தேன்” என்கிறார் சோஃபி. பிறகு அவர் teenage pregnancy crisis சேவையான Babes-ன் உதவியை நாடினார்.
Lakeside Family Services இன் முன்முயற்சியான Safe Place, துன்பத்தில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தங்குவதற்கு தற்காலிக இடம், ஆலோசனை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குகிறது.
இது சோஃபிக்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்குமிடம் இலவசமாக வழங்கியது.
அரசாங்கத்தின் ComCare நிதி உதவித் திட்டத்திலிருந்து சுமார் ஆறு மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு $480 பெற்றார். இறுதியில், பிரசவத்திற்கு முன் வீட்டிற்குத் திரும்பும்படி சோஃபியின் பெற்றோர் அவளைக் அழைக்க, மீண்டும் வீட்டிற்கு சென்றார். ஆனால், அவர்கள் நிதியுதவி ஏதும் அளிக்கவில்லை.
இப்போது குழந்தைக்கு 6 மாதமாகிறது. இன்னமும் சோஃபி தனியாகவே இருக்கிறார். தனிமையில் விடப்பட்டுள்ளார். டிகிரி படித்திருக்கும் சோஃபிக்கு ‘Single Mother’ என்பதால் வேலை கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது.
திருமணமாகாத தாயாக, தன் மகன் பள்ளிக்குச் செல்லும்போது கேலி செய்யப்படுவானோ என்ற அச்சமும் இருப்பதாக அவர் கூறினார். எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் காதலன் திரும்பி வரவில்லை. இப்போது அந்த குழந்தை அப்பா இல்லாத பிள்ளையாக வளருகிறது. இனி மெல்ல மெல்ல விவரம் தெரியும் போது தான், ‘அப்பா இல்லாத பிள்ளையாக வளரும் வலி’ என்னவென்று ஒரு பாவமும் அறியாத அந்த குழந்தைக்கு தெரியும்.