TamilSaaga

சிங்கப்பூர் வரும் புலம்பெயர்ந்த மக்கள்.. “எங்களோடு ஒருவராக ஒன்றிணைந்து வாழுங்கள்” – பாசத்தோடு கூறிய சிங்கப்பூர் பிரதமர் லீ

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் “SINDHI” என்ற சங்கம் தனது வெற்றிகரணமான 100வைத்து ஆண்டினை தற்போது கொண்டாடி வரும் நிலையில், அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கௌவரவித்தார் நமது பிரதமர் லீ சியன் லூங். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் “சிங்கப்பூரின் பன்முகத்தன்மை என்பது நிலையானது அல்ல, உலகம் முழுவதிலுமிருந்து புலம்பெயர்ந்தோரை நமது நாடு தொடர்ந்து வரவேற்கிறது”, “ஆனால் இதுபோன்று சிங்கப்பூர் வரும் புதியவர்கள் (புலம்பெயர்ந்தோர்) தங்கள் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் இங்குள்ள உள்ளூர் சமூகத்துடன் ஒருங்கிணைக்க முயற்சிகளை மேற்கொள்வது முக்கியம்” என்று அவர் கூறினார்.

மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைகளுக்கு அனுமதி.. சிங்கப்பூரில் இருந்து இனி ஈஸியா இந்தியா போகலாம் – ஆனா டிக்கெட் கேன்சல் செய்தால் Refund கிடைக்குமா?

தங்களுடைய அடையாளத்துடன் சிங்கப்பூர் அடையாளத்தையும், சொந்தம் என்ற உணர்வையும் வளர்ப்பதன் மூலம், நாம் ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றுபட்ட மக்களாக இருப்போம்.” என்றார் லீ. சிங்கப்பூர் சிந்தி சங்கத்தின் (SSA) 100வது ஆண்டு விழா நேற்று மார்ச் 13ம் தேதி சிங்கப்பூர் ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு லீ, உள்ளூர் சிந்தி சமூகம் மேற்குறிப்பிட்ட இதைத்தான் சாதித்துள்ளது என்று புகழாரம் சூட்டினார்.

குறிப்பாக, சமூகம் மற்றும் பிற இனக்குழுக்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்கு Sindhi சங்கம் உதவியது, மேலும் பரந்த நமது சிங்கப்பூர் சமுதாயத்திற்கும் பெரிய பங்களித்தது, என்றார். உதாரணமாக, அதன் உறுப்பினர்கள் முதியோர் இல்லங்களில் தன்னார்வத் தொண்டு செய்து, இரத்த தான இயக்கங்களை ஒழுங்கமைத்துள்ளனர், மேலும் தேவைப்படும் சிங்கப்பூரர்களுக்காக சார்பு சட்ட மருத்துவமனைகளை அமைத்துள்ளனர்.

உதாரணமாக, Sindhi சங்கத்தின் உறுப்பினர்கள் முதியோர் இல்லங்களில் தன்னார்வத் தொண்டுகளை செய்வது, இரத்த தான இயக்கங்களை ஒருங்கமைப்பது மற்றும் தேவைப்படும் சிங்கப்பூரர்களுக்காக சார்பு சட்ட மருத்துவமனைகளை அமைப்பது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிந்தி சமூகம் இன்றைய பாகிஸ்தானில் அமைந்துள்ள சிந்துவில் இருந்து உருவானது. 1947க்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் தெற்காசியாவின் ஒரு பகுதியை, இந்தியா மற்றும் பாகிஸ்தானாகப் பிரித்தபோது பெரிய அளவில் இடம்பெயர்வு அப்போது நடந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களை எப்போதும் கைவிடாத சிங்கை : அடுத்த மாதம் துவங்கும் Dormitory மற்றும் பணியிடம் குறித்த புதிய ஆய்வு!

அப்போது சிங்கப்பூருக்கு, சிந்தி வணிகர்கள் ஆரம்ப காலனித்துவ காலத்தில் வரத் தொடங்கினர். அதனைத்தொடர்ந்து சிங்கப்பூரில் SSA 1921ல் வணிகர்கள் குழுவாக அமைக்கப்பட்டது. இந்தியாவிற்கு வெளியே உள்ள ஒரு மிகப்பழமையான சிந்தி அமைப்பு இதுதான். சிங்கப்பூரில் தற்போது சுமார் சுமார் 7,000 சிந்திகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts