TamilSaaga

சிங்கப்பூர் பெண்ணின் Live Video Call.. வெடித்து சிதறிய சார்ஜர்.. நொடியில் தப்பிய உயிர் – தினம் குடும்பத்தினருக்கு பேசும் வெளிநாட்டு ஊழியர்களே உஷார்!

மொபைல் பயன்படுத்துவதில் எத்தனை எத்தனை ஆபத்துகள் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணமே.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Liang. 51 வயதான இந்த பெண்மணி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவரது நண்பர் ஒருவர் வீடியோ Call மூலம் அழைக்க, இவரும் எடுத்து பேசியிருக்கிறார்.

ஆனால், மொபைலில் சார்ஜ் குறைவாக இருந்ததால், தொடர்ந்து அவரால் வீடியோ Call-ல் பேச முடியவில்லை. இதனால், சோஃபாவில் அமர்ந்த படி பேசிக்கொண்டே இடது பக்கம் இருந்த Plug Point-ல் சார்ஜர் போட்டிருக்கிறார்.

அப்போது திடீரென சார்ஜர் வெடித்து தீப்பற்றியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத லியாங், தன் வலது கை மூலம், தன் மேலாடை மற்றும் ஸ்வெட்டரில் பற்றிய தீயை அணைக்க முயன்றார்.

பிறகு பெட்ஷீட்டைப் பயன்படுத்தி ஃபோனையும் சார்ஜரையும் மூடி, பின்னர் தனது மகளின் தண்ணீர் பாட்டிலை மேஜையில் இருந்து எடுத்து நீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். பிறகு அவரது மகள் ஓடி வந்து Liang-க்கு முதலுதவி செய்தார்.

மேலும் படிக்க – “இரண்டே வாரத்தில் உயிர் போய்டும்” என்று கைவிட்ட மருத்துவர்கள் – சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் மகள் கண் விழிக்க… கடவுளிடம் தினம் தினம் பிச்சைக் கேட்கும் பெற்றோர்

இதுகுறித்து Liang கூறுகையில், “எனக்கு முதல் மற்றும் இரண்டாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர் என்னிடம் கூறினார். என் கையில் இன்னும் கட்டு போடப்பட்டுள்ளது, காயங்கள் படிப்படியாக குணமடையும் வரை காத்திருக்க வேண்டும். இப்போதைக்கு ஏதேனும் தொற்று இருக்கிறதா என்பதைப் பார்க்க நான் அதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். தொற்று இல்லை என்றால் கொப்புளங்கள் குறையும் வரை நான் காத்திருக்க வேண்டும்.

நல்லவேளை, என் கை மட்டும் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக, என் முகமும் தலைமுடியும் காயத்தில் இருந்து தப்பியது. இல்லாவிட்டால் என் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்” என்றார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் தினம் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் தான் பேசுகின்றனர். அதில் சிலர் Liang போன்று சார்ஜ் போட்டுக் கொண்டே பேசியிருக்கலாம். Live Video Call அல்லது சாதாரண ஃபோன் கால் என்று எதுவாக இருந்தாலும் சார்ஜரில் இருக்கும் போது பேசுவதை தவிர்த்து விடுவதே நல்லது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts