சிங்கப்பூரில் ஒரு ஷாப்பிங் மாலில் அமைந்துள்ள கல்வி மையத்தின் இயக்குநருக்கு முகமூடி அணிய தவறியதற்காக நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) அன்று சுமார் S$ 2,700 அபராதம் விதிக்கப்பட்டது.
குவாங் ஜியோக் மிங் என்ற 56 வயது நபர் முதல் முறை இந்த குற்றத்தின் போது எச்சரிக்கப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல் நீதிமன்றத்திற்கு வெளியே S$ 300 அபராதம் செலுத்தும்படி கூறப்பட்டது ஆனால் அவரால் பணம் செலுத்த முடியவில்லை.
அதற்கு பதிலாக அவர் பலமுறை மறுஆய்வு செய்தார்.
குவாங் கடந்த வெள்ளிக்கிழமை நியாயமான காரணமில்லாமல் மீண்டும் முகமூடியை சரியாக அணியத் தவறியதாக மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மேலும் இதே போன்ற 7 குற்றங்கள் நீதிமன்றத்தில் கருத்தில் கொள்ளப்பட்டன.
குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்பு, அவர் உண்மையில் சில சந்தர்ப்பங்களில் முகமூடி அணிந்திருந்தார் ஆனால் அது அவரது கன்னத்தில் இறங்கி இருந்தது என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். ஒரு முறை தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்க அவர் தனது முகமூடியை கழற்றினார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அவரது மூக்கு மற்றும் வாயினை மூடும் வகையில் முகக்கவசம் அணியாததால் குற்றம் தாக்கல் செய்யப்பட்டது என்று நீதிபதி அவரிடம் கூறினார்.
“நீங்கள் ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தால் முகமூடியை கீழே கொண்டு வரலாம் என்று சட்டத்தில் விலக்கு இல்லை” என்று நீதிபதி தெரிவித்தார்.
மொத்தமாக 10 முறை அவர் முகமுடியை சரியாக அணியாமல் குற்றம் செய்துள்ளதை நீதிமன்றம் உறுதி செய்து அவருக்கு அபராதம் விதித்துள்ளது.