TamilSaaga

அன்று ஊரே ஏசிய ஊதாரி.. இன்று பல லட்சங்களுக்கு சொந்தக்காரர் – அரும்பாடுபட்டு சிங்கப்பூர் அனுப்பிய தாயை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் தமிழர்

ஒற்றை தாயக பிள்ளைகளை வளர்க்கும் எத்தனையோ தாய்மார்களை (தெய்வங்களை) நாம் நம் வாழ்வில் கண்டிருக்கிறோம், அதுவே தாயை விட மிகப்பெரிய சக்தி இந்த உலகில் இல்லை என்பதற்கும் சாட்சி. இன்று இந்த பதிவில் நாம் காணவிருப்பதும் ஒரு சத்திய தாயின் மகனை பற்றித்தான். நமது தமிழ் சாகா சிங்கப்பூர் வாசகரான மணிகண்டன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நம்மை தொடர்புகொண்டு தான் கடந்து வந்த பாதையை பற்றி பல நெகிச்சியான சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.

சார், சேலம் அருகே உள்ள ஒரு சிறிய ஊரை சேர்ந்தவன் நான், பெரிய படிப்பு இல்லை, ITI வரை தான் படித்தேன். அப்பாவை போல நானும் ஒரு ஊதாரி, என்னடா பெற்ற தகப்பனை இப்படி பேசுறான்னு நினைக்கிறீங்களா? என்ன பண்றது பெற்றவர் எல்லாம் தகப்பனாக மாறிவிடுவதில்லை. எங்க குடும்பத்தோட ஒரே உழைப்பாளி என் தாய் தான்.

அம்மா கூலி வேலை செய்து கொண்டுவரும் பணத்தை என் அப்பா கொஞ்சம் குடிக்க எடுத்து செல்ல நான் உதாரியாக ஊரை சுற்ற கொஞ்சம் எடுத்துச்செல்வேன். எங்ககிட்ட மாட்டிகிட்டு என் தெய்வம் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ஒரு கட்டத்தில் குடிப்பழக்கம் அதிகமாக என் தந்தை எங்களை விட்டு பிரிந்தார். தப்பா நினைக்காதீங்க சார், அவர் இறந்தபொழுது எனக்கு அழுகைக்கூட வரல.

நான் பார்த்தது எல்லாம் எங்க அம்மாவை கொடுமைப்படுத்தி காசு பிடுங்கி செல்லும் ஒரு தகப்பனைத் தான். அப்பா இறந்த பிறகு தான் அவர் வாங்கிய கடனின் அளவு எங்களுக்கு தெரியவந்தது. மலைத்துப்போனோம், கடன்காரங்க எல்லாம் எவ்வளவோ கேவலமா பேசினாங்க. என் தாய் அனுபவிக்காத கொடுமை இல்லை, ஆனா கடனை அடைக்க ராப்பகலா நாய் மாதிரி உழைச்சாங்க சார் எங்க அம்மா என்று கூறிக்கொண்டே கண்ணீர் வடித்தார்.

சிங்கப்பூர் Hougang பகுதி.. “மர்ம குண்டுகளால்” தாக்கப்பட்ட வீடுகள் – பலே வேலை பார்த்தவரை பதமாக தூக்கி சிறையில் போட்ட சிங்கை போலீஸ்!

ஒருகட்டத்துல அவங்க மேல விழுற பேச்சுக்களை என்னால் காதுகொடுத்து கேக்கமுடியால, கடனை கட்ட ஒருபக்கம், எனக்கு சோறுபோட ஒருபக்கம்னு படாதபாடு பட்டாங்க. ஆண்டவன் அப்போதான் எனக்கு நல்ல புத்தி கொடுத்தான் போல, நானும் கூலிவேலைக்கு போறேன், கொஞ்ச நாள் பொறுத்துக்கனு சொல்லிட்டு சென்னைக்கு ஓடினேன்.

சிங்கப்பூருக்கு skilled முடிச்சுட்டு போனா நல்லா சம்பாரிக்கலாம்னு யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. சென்னையில் தெரிந்த நண்பரிகளிடம் எல்லாம் கையேந்தினேன், கிடைத்த காசை கொண்டு Skilled Test முடித்தேன். இறுதியில் ஏஜெண்டுகளை நாடினேன் சிங்கப்பூரில் ஒரு Electrical கம்பெனியில் வேலையும் கிடைத்தது. ஆனா 2 லட்சம் கேட்டாங்க, படிச்சதே கடன் வாங்கி, நான் எங்க 2 லட்சம் கட்டி சிங்கப்பூர் போறதுன்னு மனசு ஒடிஞ்சுபோய் உக்காந்தேன்.

கைல மேற்கொண்டு காசும் இல்ல, வீட்டுக்கு வெறும்கையோடு திரும்பினேன், ஆனா அந்த சண்டாளி எங்கடா உழைச்ச காசுன்னு கூட என்ன கேக்கல சார். சாப்டியா நீ, என்னடா இப்படி கருத்துட்டன்னு கேட்சு. சிங்கப்பூர் போறத பத்தி பேசினேன் உடனே ஓடிச்சு சார் அடகு கடைக்கு, தாலி உள்பட எல்லாத்தையும் அடமானம் கூட இல்ல எல்லாத்தையும் வித்து காசு கொடுத்துச்சு.

நானும் சரி விடுடா மணிகண்டா ஒரே வருஷத்துல அம்மாக்கு 10 மடங்கா செஞ்சுறலாம்னு ஒரு வெறியோடு சிங்கப்பூர் வந்தேன். மாடு மாறினு சொல்லலாம் சார், அப்படி உழைச்சேன், வெளிய எங்கயும் போகமாட்டேன், பைசா பைசாவா சேர்த்தேன். இங்க கிடைச்ச சில நல்ல நண்பர்கள் உதவுனாங்க சார் அவங்கள எப்போவும் மறக்க மாட்டேன்.

மேல course படிக்க சொன்னாங்க, படிச்சேன் 2 வர்ஷம் என் அம்மா கிட்ட சரியா கூட பேசாம உழைச்சேன் சார். காசு நிறைய சேர்ந்தேன், அப்படியே 5 வர்ஷம் ஓடுச்சு நடுல ரெண்டு தடவ அம்மாவை போய் பார்த்துட்டு கடனுக்கு காசு கட்ட பணம் குடுத்துட்டு வந்தேன். இறுதியை நான் சிங்கப்பூர் வந்து சரியா 6வது வர்ஷம் வேற கம்பெனியில் நான் நினைச்சுக்கூட பாக்காத சம்பளத்துல வேலை கிடைச்சது. ஆசை ஆசையாய் அம்மாக்கு போன் அடிச்சேன் இனி கவலையே இல்ல நமக்கு விடிவு காலம் பொறந்திருச்சுன்னு சொல்ல அடிச்சேன்.

சிங்கப்பூர் சூன் லீ சாலை.. எழுத்துப்பிழையோடு வைக்கப்பட்ட பதாதைகளை – “தமிழக புலம்பெயர் தொழிலாளிகளிடம்” பகிரங்க மன்னிப்பு கேட்ட MWC

ராஜா மாமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போன் எடுத்தாரு, பின்னாடி அழுகுரல் கேக்குது, எனக்கு இதயம் படபடக்குது. கனத்த குரலில் மாமா சொன்னாரு டேய் மாப்ள அம்மா நம்ம எல்லாரையும் விட்டு போயிட்டுடானு. என்னோட ஆறு வருஷ உழைப்பு, நான் பட்ட வலி, அனுபவிச்ச வேதனை எல்லாம் வீணாப்போச்சு சார். கடவுள் மேல அப்படி ஒரு கோவம் எனக்கு அதுவரை வந்ததே இல்லை சார்.

ஓடுனேன் வீட்டுக்கு, என்ன ஆச்சுன்னு அக்கம்பக்கத்துல கேட்டேன், மூணு வருஷத்துல இரண்டு தடவ பெரிய அளவுல நெஞ்சு வலி வந்துருக்கு. ஏற்கனவே கடனை கட்ட மாடா உழைக்கிறானு கடைசிவரை என்கிட்ட சொல்லாமலே போயிருச்சு சார். புருஷன் சரியில்ல, ஊதாரி புள்ள வேற என்ன ஆகும் அதுக்கு. ஆனா நான் எனக்காக சிங்கப்பூர் போகல சார். கடைசி காலத்துல என் அம்மாவ நல்லா கவனிச்சுக்கத்தான் ஓடினேன் ஆனா ஆண்டவன் எனக்கு அந்த பாக்கியத்தை கொடுக்கல.

“இனி Health Declaration தேவையில்லை”.. சிங்கப்பூர் வருபவர்களுக்கு மேலும் ஒரு தளர்வு.. ICAவின் தீடீர் அறிவிப்பு – இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு இது பொருந்துமா?

கடந்த 2018 வரை சிங்கப்பூர்ல லட்சத்துல சம்பளம் வாங்கினேன், இப்போ சொந்த ஊர் பக்கத்துல உள்ள டவுன்ல ஒரு முதியோர் இல்லை நடத்துறேன். கல்யாணம் செஞ்சுக்கல வாழ்க்கை மட்டும் அப்டியே ஓடுது. உண்மைக்கும் அம்மா அப்பா நல்லா இருக்குற காலத்துலே அவங்களுக்கு எல்லாம் செஞ்சு அழகு பார்க்கணும் சார் இல்லனா என் நிலைமைதான் என்று முடித்தார் அவர்.

தன் உயிரை உரமாக்கும் தாய் தந்தைக்காக சிங்கப்பூரில் போராடும் எல்லா தொழிலாளர்களும் நிச்சயம் மதிக்கப்படவேண்டியவர்களே.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts