உலகளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தொற்றுக்கு எப்பொழுது முடிவு வரும் என்று மக்கள் அனைவரும் மிகவும் ஆவலாக இருந்துவரும் நிலையில் டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று புதிய புதிய உருவங்களில் தொடர்ந்து இந்த நோய் தொற்று நம்மை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வரிசையில் தற்பொழுது Omicron என்ற புதிய மாறுபாடு இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 29 நாடுகளில் இந்த வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் எல்லைகளை அதிக கவனத்துடன் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் ஏனெனில் சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு பெருந்தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள Omicron சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த நபருக்கு தற்போது பெருந்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் நாகர்கோயில் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் என்று தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு தற்போது Omicron சோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இந்த பாதிப்பு பெருந்தொற்று பாதிப்பு தான், ஆனால் தற்போது பரவி வரும் இந்த புது வகை கிருமி காரணமாக தொற்று பாதித்தவர்களுக்கு omicron சோதனை நடத்தப்படுகிறது. மக்கள் அச்சம்கொள்ளாமல் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.