சிங்கப்பூரை பொறுத்தவரை சாலை விதிகளை புறக்கணிப்பது என்பது மிகவும் கடுமையான குற்றமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரின் நாட்டின் சீரான வளர்ச்சிக்கு இந்த சாலை விதிகளில் மீறல்களும் ஒரு மிகப்பெரிய தடையாகவே இங்கு பார்க்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அது நடந்து செல்லும் பாதசாரிகளாக இருந்தாலும் சரி, இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் கனரக வாகனங்கள் வரை எதுவாக இருந்தாலும் சரி சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பது சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக இருந்து வரும் சட்டம்.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்தவருக்கு தொற்று
இந்நிலையில் சிங்கப்பூரின் Hougang பகுதியிலுள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் செய்த காரியம் இணையத்தில் இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து Sg Singapore Vigilante என்ற முகநூல் கணக்கில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், சிங்கப்பூரின் Hougang பகுதியில் Midtownல் உள்ள ஒரு கார் பார்க்கிங் ஏரியாவிற்கு உள்ளே செல்ல ஒரு கார் வருகின்றது.
ஆனால் அந்த கார் வரும் பாதையில் ஒரு பெண் சற்றும் யோசிக்காமல் கடந்து செல்கின்றார். அந்த பெண்ணை அலெர்ட் செய்ய அந்த கார் டிரைவர் மெல்லிய ஹார்ன் சத்தத்தையும் எழுப்பியும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த கார் பார்க்கிங் பகுதியை கடந்து செல்லும்போது அந்த கார் ட்ரைவரை நோக்கி தனது நடுவிரலை காட்டிச்செல்கின்றார்.
இந்நிலையில் தற்போது அந்த பெண்ணுக்கு எதிராக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்த பெண்ணின் நடத்தையைப் பற்றி அவளுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். மற்றவர்கள் அவளுடைய நடத்தை உண்மையில் மோசமான வளர்ப்பில் இருந்து உருவாகிறது என்று கூறுகின்றனர்.