TamilSaaga

“மண்ணில் புரண்டது ஒரு குத்தமா?” : சிங்கப்பூர் Pandan பகுதியில் நீர்நாய்களை விரட்டி விரட்டி கொத்திய காகங்கள் – வைரலாகும் Video

சிங்கப்பூரின் பாண்டன் நீர்த்தேக்க பகுதியின் புல்வெளியில், பொழுதை நிம்மதியாக கழித்துக்கொண்டிருந்த இரண்டு ஆட்டர் எனப்படும் நீர்நாய்களுக்கு ஏற்பட்ட சங்கடம் பார்ப்பவர்களை யோசிக்க வைத்துள்ளது. ஆம் பாண்டன் நீர்த்தேக்க பகுதியில் கடந்த ஜனவரி 7 வெள்ளிக்கிழமை அன்று ஜாலியாக ஓய்வெடுத்த நிலையில் 14 காகங்களால் தொந்தரவு செய்யப்பட்டு அந்த இடத்தில் இருந்து விரட்டப்பட்டுள்ள காணொளி தற்போது சிங்கப்பூர் முழுவதும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படியுங்கள் : “இனி ஈஸியா சிங்கப்பூரில் இருந்து திருப்பதி செல்லலாம்” : திருச்சி மார்கமாக சேவையை அளிக்கும் Indigo – என்று முதல் தெரியுமா?

Singapore Wildlife Sightings என்ற Facebook பக்கத்தில் Kok Beng Cheng என்ற நபர் மூன்று காணொளிகளை வெளியிட்டுள்ளார். அதில் முதல் காணொளியில் இரண்டு நீர்நாய்கள் தங்கள் முதுகை மணலில் தேய்த்தவாறு சுகமாக நேரத்தை கழிக்க அங்கு வந்திறங்குகிறது இரண்டு காகங்கள். இரண்டு மூன்றாக பின் மூன்று நான்காக இறுதியில் அந்த நீர்நாய்களை சுற்றி மொத்தம் 14 காகங்கள் வந்திறங்கின. “அட என்னடா இது ஆட்டருக்கு வந்த சோதனை” என்று எண்ணி அந்த நீர்நாய்கள் விழிபிதுங்கி அங்கும் இங்கும் உருளும் காட்சிகள் நம்மை சற்று அவற்றுக்காக வருத்தப்படவைக்கின்றது.

வந்திறங்கி குழுமியிருந்த 14 காகங்களும் தங்கள் வேலையை காட்ட துவங்கியது, அந்த இரு நீர்நாய்களின் வால்களை தொடர்ந்து கொத்தியது. ஒருகட்டத்தில் கடுப்பான நீர்நாய்கள் அந்த இடத்தைவிட்டு நகர அந்த காகங்களும் தொடர்ந்து அவற்றை விரட்டி சென்று கொத்தியது.

காகங்கள் மற்ற விலங்குகளை ஏன் துன்புறுத்துகின்றன?

Corvids அதாவது காக்கைகள் மற்றும் காக்கைகளை உள்ளடக்கிய பறவை குடும்பம் பொதுவாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிப்பதில் பெயர் பெற்றவை என்று கூறப்படுகிறது. அவை உணவைத் திருடுவது, நாய்களைத் துன்புறுத்துவது மற்றும் முட்டைகளுக்காக கூடுகளைத் தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது. மேலும் தங்களை தாக்கும் விலங்குகள் மீது கூட்டமாக தாக்கும் குணம் கொண்டது காக்கை, இதே போன்ற குணம் கோழிகளிடமும் உள்ளது என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : Exclusive : “உயிரிழந்த தொழிலாளி ராஜேந்திரன்” : Air India Express மூலம் திருச்சி கொண்டுசெல்லப்பட்ட உடல் – சோகத்தில் உறவுகள்

காகங்கள் ஏன் மற்ற விலங்குகளின் வாலை கொத்துகிறது?

விலங்குகளை திசைதிருப்ப பொதுவாக காகம் அப்படி செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. வேட்டை விலங்குகளை கொத்தி விரட்டி அவைகளின் உணவை எடுக்க காகங்கள் முயற்சிக்கும் என்று Mothership நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts