TamilSaaga

சிங்கப்பூரில் ஒருங்கிணைந்த சமூக மையமான “One Punggol” : அடுத்த ஆண்டு திறக்க திட்டம் – என்னென்ன எதிர்பார்க்கலாம்?

சிங்கப்பூரில் One-Stop மையமான One Punggol, ஒரு நூலகம் மற்றும் 700 இருக்கைகள் கொண்ட ஹாக்கர் மையம் முதல் குழந்தை பராமரிப்பு மற்றும் மூத்தோர் பராமரிப்பு மையங்கள் வரை பல வசதிகளைக் கொண்டுள்ளது, இது அடுத்த ஆண்டு மத்தியில் இருந்து கட்டம் கட்டமாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் 2,00,000 குடியிருப்பாளர்களுக்கு இது சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : “மறுசுழற்சி செய்தால் பணம்”

இந்த ஐந்து மாடி கட்டிடம் புங்கோல் MRT நிலையம், புங்கோல் டவுன் சதுக்கம், வாட்டர்வே பாயிண்ட் மால், புங்கோல் வாட்டர்வே பார்க் மற்றும் நடைபாதைகள் மூலம் குடியிருப்புத் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2.8 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இது சுமார் நான்கு கால்பந்து மைதானங்களின் அளவில் உள்ளது. One Punggol மற்ற இரண்டு ஒருங்கிணைந்த சமூக மையங்களின் படிகளைப் பின்பற்றுகிறது.

சுகாதாரம், தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறையின் மூத்த அமைச்சர் மற்றும், பாசிர் ரிஸ்-புங்கோல் ஜி.ஆர்.சி.யின் எம்.பி.யான டாக்டர் ஜனில் புதுச்சேரி, தொற்றுநோய் காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமானாலும், இந்த இடம் அதற்கான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தெரிவித்தார். மேலும் இந்த இடம் படிப்படியாக திறக்கவும் ஆவணம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார் அவர்.

80 சதவீதம் வேலைகள் நிறைவடைந்துள்ள இந்த மையம், ஒரே கூரையின் கீழ் வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக மக்கள் சங்கம், வீட்டுவசதி வாரியம் மற்றும் சுகாதார அமைச்சகம் உட்பட பல நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது. ஐந்தாவது மாடியில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் நான்கு பூப்பந்து மைதானங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்காக 600 இருக்கைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை நடந்த விழாவில் பாசிர் ரிஸ்-புங்கோல் GRC இன் மற்ற எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு. தியோ சீ ஹீன்; உள்துறை, மற்றும் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கான மாநில அமைச்சர், திரு டெஸ்மண்ட் டான்; திருமதி இயோ வான் லிங் மற்றும் திரு ஷரேல் தாஹா. கல்வி, மற்றும் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி சன் சூலிங், ஆகியோர் கலந்துகொண்டனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts