சிங்கப்பூரில் வழக்கமாக ஒர்க் பர்மிட், எஸ் பாஸ், இ பாஸ் போன்ற வார்த்தைகளை மட்டுமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் செப்டம்பர் 1,2023 முதல் நடைமுறைக்கு வந்தது தான் இந்த என் டி எஸ் (NTS) பெர்மீட். என் டி எஸ் பெர்மிட் என்றால் என்ன என்ற சந்தேகம் நம் அனைவருக்கும் இருக்கும். யார் யாரெல்லாம் இந்த பெர்மிட்டின் கீழ் வேலை செய்ய தகுதியானவர்கள் மற்றும் சம்பளம் என்ன என்ற முழு விவரத்தை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக மேனுஃபாக்சரிங் அண்ட் சர்வீஸ் (Manufacturing and service) துறையின் கீழ் என் டி எஸ் பெர்மிட்டின் கீழ் பணிக்கு அமர்த்தலாம். அதாவது சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் இருக்கு பணிபுரிய தேவையான மற்றும் மற்ற பணிக்கு தேவையானவர்களை இந்த பெர்மிட்டின் கீழ் பணிக்கு அமர்த்தலாம். அதுமட்டுமல்லாமல் சீட் மெட்டல் ஒர்க், வெல்டிங், மெட்டல் மோல்டிங் ஒர்க், ஸ்ட்ரக்சுரல் மெட்டல் ஒர்க் போன்ற இந்த பெர்மிட்டின் கீழ் ஆட்களை எடுக்கலாம்.
ஆனால் இந்த பெர்மிட்டின் கீழ் குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கலாம் என எம் ஓ எம் நிபந்தனை விதித்துள்ளது. மலேசியா, சைனா, ஹாங்காங், சவுத் கொரியா, பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, தாய்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்தோர் இந்த பெர்மிட்டுக்கு அப்ளை செய்யலாம்.
இந்த பெர்மிட்டின் கீழ் வேலைக்கு சேருவோருக்கு குறைந்தபட்சம் 2000 சிங்கப்பூர் டாலர் ஃபிக்சட் சம்பளம் வழங்கப்பட வேண்டும். மேலும் பெர்மீட்டில் என்ன வேலை கொடுக்கப்பட்டுள்ளது அந்த வேலைக்கு தான் நபர்களை அழைத்து வர வேண்டும். இந்திய ரூபாயின் படி பார்த்தால் ஒரு லட்சத்து இருபதாயிரம் சம்பளம் இந்த பெர்மிட்டின் கீழ் வழங்கப்பட வேண்டும்.