TamilSaaga

தேக்காவில் சென்று பொருட்களை வாங்கும் மக்களுக்காக கொண்டுவரப்பட்டிருக்கும் புது மாற்றம்… குஷியாகி வரவேற்ற மக்கள்!

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா மற்றும் தேக்கா என்னும் இடங்கள் அங்கு வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ளதை போன்று நினைவினை தரக்கூடிய முக்கியமான இடங்கள் ஆகும். பொதுவாக சிங்கப்பூர் தமிழர்கள் ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் லிட்டில் இந்தியா மற்றும் தேக்கா பகுதிகளுக்கு சென்று பொருள்களை வாங்கி சென்று சொந்த ஊருக்கு செல்வது தான் வழக்கம்.

பொருட்கள் வாங்க செல்லும் இடத்திற்கு அருகே உள்ள கார் பார்க்கிங்கில் டாக்ஸிகள் மட்டும் தான் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டிருந்தது .மக்கள் மலிவான தனியார் வாகனச் சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் பஃபல்லோ சாலைக்கு அருகில் உள்ள பிளாக் 664க்கு சென்று தான் பயன்படுத்த வேண்டும்.தனியார் வாகன சேவையை விட டாக்ஸிக்கு செலுத்தும் கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாகவே இருக்கும்.இதனால் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் பொருட்களை கடினப்பட்டு கைகளில் தூக்கிக் கொண்டுதான் சாலை வரை செல்ல வேண்டும் .

இந்நிலையில் பார்க்கிங்கில் டாக்ஸிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மூன்று இடங்கள் நீக்கப்பட்டு அந்த இடத்தில் வாடகை பணங்கள் அல்லது தங்கள் சொந்த வாகனங்களை நிறுத்தக்கூடிய அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன இந்நிலையில் பெரும்பாலான மக்கள் சேவையை மிகவும் வரவேற்றுள்ளனர். மேலும் மலிவான கட்டண சேவையை மக்கள் பெறுவதற்கு ஏதுவான வகையில் இந்த உதவும் என வரவேற்றுள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts