சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இருந்து தமிழகம் உள்பட இந்தியா பல பகுதிகளுக்கு இடையே பல விமான சேவை நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிங்கப்பூரில் Omicron பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் தற்போது சிங்கப்பூர் தனது VTL சேவைகள் வழியாக சிங்கப்பூருக்குள் வர தற்காலிக தடையை விதித்துள்ளது. சிங்கப்பூரில் பதிவாகும் புதிய Omicron வழக்குகளில் 70 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருபவர்களிடையே தான் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலில் சிங்கப்பூரின் பட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனமான Fly Scoot தற்போது தமிழகத்தின் கோவை முதல் சிங்கப்பூருக்கு எல்லா வாரங்களிலும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விமானங்களை இயக்கவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி துவங்கி இந்த கோவை – சிங்கப்பூர் சேவை செயல்பட்டு வருகின்றது என்பது நினைவுகூரத்தக்கது.
Fly Scoot TR-541 என்ற விமானம் தான் இந்த சேவையில் ஈடுபடவுள்ளது, மேற்குறிப்பிட்ட கிழமைகளில் வாரம்தோறும் கோவையிலிருந்து இரவு 11.45 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டு சுமார் 4 மணிநேர பயணத்திற்கு பிறகு சிங்கப்பூருக்கு காலை 6.25 மணியளவில் சென்றடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்திற்கு Baggage சேர்க்காமல் ஒரு வழி பயணத்திற்கு 5999 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல சிங்கப்பூரில் இருந்தும் கோவைக்கு இந்த சேவை இயக்கப்படுகிறது. ஆனால் நேரடியாக சிங்கப்பூரில் இருந்து கோவை வருபவர்கள் மட்டுமே இந்த விமான சேவையை பயன்படுத்த முடியும். மாறாக வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கிருந்து கோவை வருபவர்கள் இந்த சேவைகளை பயன்படுத்த முடியாது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கோவை – சிங்கப்பூர் flyscoot விமானங்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 2022ம் ஆண்டு ஜனவரி 5,7,9,12,14,16,19,21,23,26,28,30 ஆகிய தேதிகளில் விமானங்கள் இயக்கப்படவுள்ளது. சிங்கப்பூரில் இருந்து நாளை ஜனவரி 5ம் தேதி இரவு 8.50 மணிக்கு Fly Scoot புறப்பட்டு கோவைக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும். அதே விமானம் மீண்டும் அதேநாள் இரவு 11.45 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வரும்.