சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் ஏற்பட்ட பொழுது தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் போதிய இட வசதி இல்லாமல் சிரமப்பட்ட நிலையில் இனி வரும் காலங்களில் கிருமி பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2040 ஆம் ஆண்டுக்குள் தொழிலாளர்கள் தங்கும் ஆயிரம் விடுதிகள் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு மாற்றப்படும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இனி கட்டப்படும் விடுதிகளில் விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தங்கும் விடுதிகளில் ஒரு அறைக்கு 12 பேர் மட்டுமே வசிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு படுக்கைகளுக்கும் இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் 4.2 சதுர மீட்டர் இடம் கிடைக்குமாறு விடுதிகள் கட்டப்பட வேண்டும் எனவும் ஆறு பேருக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இருக்கும் தற்பொழுது இருக்கும் சில விடுதிகளில் ஆறு பேருக்கு ஒரு கழிவறை இல்லாமல் பொதுவான கழிவறை இருப்பதால் இந்த வசதிகளை கட்டமைக்க இயலாத சூழ்நிலை இருப்பதால் அவ்விடுதிகளுக்கு மனித வள அமைச்சகம் அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.