TamilSaaga

சிங்கப்பூரில் சைக்கிளிங் போவது சுகமானது தான் : ஆனா சைக்கிளிங்கில் எதெல்லாம் பண்ணக் கூடாது? – அரசின் புது Rules இதோ

கொரோனா பெருந்தொற்று காலம் தொடங்கியது முதலே சைக்கிளிங் சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. சிறந்த உடற்பயிற்சி முறையாக இருக்கும் சைக்கிளிங், சுற்றுலாத் தலங்களை ரசிக்கவும் அலுவலகங்களுக்குச் செல்லும் எளிதான போக்குவரத்து முறையாகவும் இருக்கிறது. சைக்கிளிங் செல்வது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும் விஷயம் என்பதால், சிங்கப்பூர் மக்களின் கவனம் இதன்பக்கம் திரும்பியிருக்கிறது.

நீங்களும் சைக்கிளிங் பக்கம் போக விரும்புவீர்கள் என்றால், உங்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பூர் அரசு சைக்கிளிங்குக்காக சாலை பாதுகாப்பு விதிகளில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. 2022-ம் ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே அமலில் இருக்கும் இந்தப் புதிய விதிகள் பற்றிதான் இந்த செய்தியில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

ஹாங்காங் எடுத்த “அந்த முடிவு” : சிங்கப்பூர் விமான நிலையங்களுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் – ஒரு Complete Analysis

விதிமீறல்

புதிய விதிமுறைகளை நீங்கள் கடைபிடிக்காதபட்சத்தில் உங்களுக்கு 150 டாலர்கள் அபராதமாக விதிக்கப்படும். குற்றம் கடுமையானால், நீதிமன்ற தண்டனைக்கும் நீங்கள் உள்ளாக்கப்படுவீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சாலைகளில் செல்லும்போது மற்ற வாகனங்களில் செல்வோரை விட சைக்கிளில் செல்வோர் மெதுவாகவே செல்ல வேண்டும். மற்ற வாகனங்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் சைக்கிளில் இல்லை என்பதால், விபத்து நேரிடுகையில் சைக்கிளில் செல்வோர் மோசமாகக் காயமடைய அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால், சைக்கிளிங் செய்யும்போது மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

சைக்கிளிங் செய்வோர் செய்யக் கூடியது மற்றும் செய்யக் கூடாதது என்ன?

சைக்கிளிங் செய்யும்போது உங்கள் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களின் பாதுகாப்புக்காகக் கீழ்க்காணும் விதிகளைக் கட்டாயமாகப் பின்பற்றுங்கள்…

  1. குரூப் சைக்கிளிங்
    நண்பர்கள், குடும்பத்தினரோடு குருப் சைக்கிளிங் செய்ய விரும்புகிறீர்களா… அப்படியென்றால், உங்கள் குரூப்பில் ஐந்து பேருக்கு மிகாமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, குழுவாக சாலைகளில் செல்லும்போது ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மொத்தமாக சாலைகளை அடைத்துக் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது.

இதனால், உங்கள் குரூப் மிகப்பெரியதாக இருக்கும்படி திட்டமிடாதீர்கள். அப்படி இருக்கும்பட்சத்தில், சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மற்ற வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வண்ணம் ஒரு குரூப்பில் ஐந்து சைக்கிள்களுக்கு மிகாமல், ஒன்றன் பின் ஒன்றாக ஒரே வரிசையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

ஒருவேளை உங்கள் குரூப்பில் 10 பேர் இருந்தால், அதை தலா ஐந்து பேர் கொண்ட இரண்டு குழுவாகப் பிரித்துக் கொள்ளுங்கள். முதல் குழுவுக்கும் இரண்டாவது குழுவுக்கும் இரண்டு லேம்ப் போஸ்ட் நீளம் அளவுக்கு இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன்மூலம், மற்ற வாகனங்கள் பாதுகாப்பாக உங்கள் குரூப்பை சேஸ் செய்து பயணிக்க இது உதவும். கொரோனா கால பாதுகாப்பு விதிகள் நடைமுறையில் இருப்பதால், இந்த காலங்களில் ஐந்து பேருக்கு மேற்பட்ட குரூப்கள் சைக்கிளிங் செய்ய அனுமதியில்லை.

  1. பாதுகாப்பு
  • சைக்கிளிங் செய்யும்போது நீங்கள் அடையும் ஆடை பிரைட் கலரில் இருக்க வேண்டும். சாலைகளில் வரும் மற்ற வாகன ஓட்டிகள் உங்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள இது உதவும்.
  • இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை உங்கள் சைக்கிளின் முன்புற மற்றும் பின்புற விளக்குகளை எரியவிடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
  • ஹெல்மெட் கட்டாயம்
  • பிளைண்ட் ஸ்பாட் எனப்படும் கண்ணுக்குத் தெரியாத பகுதிகள் குறித்து கவனமாக செயல்படுங்கள். சைக்கிளிங்கின்போது இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
  1. போக்குவரத்து விதிகள்
  • சைக்கிளிங் செய்வோர் மற்றும் நடந்து செல்வோர் என அனைவருக்கும் போக்குவரத்து விதிகள் பொருந்தும்.
  • சிவப்பு, பச்சை நிற சிக்னல்களை நினைவில் வைத்து, ஏற்கனவே அமலில் இருக்கும் போக்குவரத்து விதிகளைக் கட்டாயமாகக் கடைபிடியுங்கள்.
  • விரைவுச் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் பயணிக்க வேண்டாம்.

மற்ற வாகன ஓட்டிகளுக்கான விதிகள்

சைக்கிளில் செல்வோர் மற்றும் சாலைகளில் நடந்து செல்வோரின் பாதுகாப்புக் கருதி மற்ற வாகனங்களில் செல்வோர் கவனமுடன் பயணிப்பது தார்மீகக் கடமையாகும்.

குறைந்தபட்ச இடைவெளி

சைக்கிளில் செல்வோருக்கும் உங்களுக்குமான குறைந்தபட்ச இடைவெளி 1.5 மீ இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். காரில் செல்லும்போது சைக்கிளிங் செல்வோரை மிக அருகில் நீங்கள் கடந்து சென்றால், அதனால் ஏற்படும் அழுத்தத்தால் சைக்கிளின் நிலை தடுமாறி அவர்கள் கீழே விழுந்து காயமடைய அதிக வாய்ப்புண்டு.

மிகக் குறைவான வேகத்தில், இரண்டு சக்கரங்களின் பேலன்ஸால் சாலைகளில் பயணிக்கும் சின்னஞ்சிறிய சைக்கிள் போன்ற வண்டிகள், ஒரு சிறிய தடுமாற்றத்தால் கூட பேலன்ஸை இழக்க நேரிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால், உங்கள் வாகனத்துக்கும் சைக்கிளுக்கும் இருக்கும் குறைந்தபட்ச இடைவெளி என்பது 1.5 மீ-ஆவது இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

நோ டெய்ல் கேட்

டெய்ல் கேட்டிங் எனப்படும் பின் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்தானது. குறுகிய இடைவெளியில் நீங்கள் ஒரு வாகனத்தைப் பின் தொடர்ந்தால், உங்களுக்கான ரியாக்‌ஷன் நேரம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்படவும் வாய்ப்பு அதிகம்.

“இது சிங்கப்பூரின் புதிய அடையாளம்” : 280 மீட்டர் உயரத் தோட்டம், சைக்கிளிங் – பிரமிப்பூட்டும் CapitaSpring கட்டிடம்

மேலும், அதுபோன்ற சூழல்களில் சைக்கிளிஸ்ட் சாதாரணமாகச் செல்லும் வேகத்தை விட அதிவேகமாகச் செல்லும்படி நிர்பந்திக்கப்படுவர். இதனால், விபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு. இதனால், சரியான இடைவெளியில் ஃபாலோ பண்ணுங்கள். சாலை பாதுகாப்பு என்பது நம் எல்லோருடைய பொறுப்புணர்வு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts