சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) அதன் தினசரி பெருந்தொற்று அளவு குறித்த பத்திரிகை வெளியீடுகளின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, முந்தய தொற்று சம்பவங்களுடன் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத புதிய பெருந்தொற்று வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கையை இனி அறிவிக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 8) இரவு MOH தனது தினசரி செய்திக்குறிப்புடன் கூடிய அறிக்கையில், சிங்கப்பூர் “கோவிட் -19க்கு எதிரான நமது போரின் மிகவும் மாறுபட்ட நிலைக்கு நுழைவதால் முக்கிய பிரச்சினைகளை பிரதிபலிக்கும் வகையில் தனது தினசரி COVID-19 அறிக்கைகளை மாற்றியமைத்துள்ளது” என்று கூறியது.
“முந்தய வழக்குகளுடன்” “இணைந்த/இணைக்கப்படாத வழக்குகளின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை நாங்கள் இனி வழங்க மாட்டோம், ஏனெனில் இது கோவிட் -19 உடன் வாழும் நமது தற்போதைய உத்தியைக் கருத்தில் கொண்டு, எடுக்கப்பட்ட முடிவு” என்று MOH தெரிவித்துள்ளது. அது மேலும் கூறியது: “இன்று, உலகில் அதிக தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ஒன்றாக நமது சிங்கப்பூர் இருக்கின்றது, நமது மக்கள் தொகையில் 81 சதவீதம் பேர் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக்கொண்டுள்ளனர்.”
“அதிக தடுப்பூசி விகிதத்துடன், கோவிட் -19 நெகிழ்வான தேசத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் சரிசெய்துள்ளோம்” என்று MOH தெரிவித்தது.