சிங்கப்பூரில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு அவை இன்று முதல் அமலாகியுள்ளது.
உணவக கட்டுப்பாடுகள்:
உணவகங்களில் இன்று முதல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி கிடையாது. பார்சல் சேவைகள் மற்றும் டெலிவரிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சமூக கூட்டம் மற்றும் வீடுகளில் கட்டுப்பாடுகள் :
சமூக ஒன்று கூடல்கள் போன்றவற்றில் 2 பேர் மட்டுமே அனுமதி. வீட்டில் உட்புற நிகழ்ச்சிகளிலும் 2 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.
பொது இடங்கள் கட்டுப்பாடுகள் :
சொகுசு படகு சவாரி, பொது நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றில் 25 சதவீதம் மக்களுடன் செயல்படலாம்.
சுற்றுலா மற்றும் பணி :
குழுவாக சுற்றுலா செல்பவர்கள் 20 பேர் மட்டுமே குழு அமைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்படுவார்கள்.
உடற்பயிற்சி கூடம் :
உடற்பயிற்சி கூடங்களில் உட்புற நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செயல்பட வேண்டும்.
முகக்கவசம் இன்றி செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமண விழாக்கள் மற்றும் இறுதிச்சடங்குகள் :
திருமண விழாக்களில் அதிகபட்சமாக 100 பேர் கலந்துகொள்ளலாம். அதிலும் PET பரிசோதனை செய்தவர்கள் மட்டுமே 100 பேர் அனுமதிக்கப்படுவார்கள். PET சோதனை செய்யவில்லை என்றால் 50 பேர் மட்டுமே திருமண விழாக்களுக்கு அனுமதி.
இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் இன்று (ஜீலை.22) முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை அமலில் இருக்கும்.