TamilSaaga

அவர்களை “இந்த” வேலையெல்லாம் செய்யசொல்லாதீர்கள் – சிங்கப்பூர் செக்யூரிட்டி அசோசியேஷன்

சிங்கப்பூரில், குடியிருப்பு பகுதியில் பணியில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் விளக்குகளை மாற்றச்சொல்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச்சொல்வது, அவர்களை உணவு வாங்க அனுப்புவது, அல்லது குடியிருப்பாளர்களுக்கு பொருட்களை வாங்க அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுத்த கூடாது என்று சிங்கப்பூர் செக்யூரிட்டி அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

இன்று புதன் கிழமை (ஜூலை 21) அந்த அசோசியேஷன் வெளியிட்ட அறிக்கையின் 36வது பக்க முடிவின்படி அவர்கள் ரோந்து அல்லது சொத்துக்களைப் பாதுகாத்தல், குறிப்பிட்ட இடங்களுக்குள் நுழைய விரும்பும் நபர்களைத் திரையிடுதல் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற முக்கிய பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தங்களுடைய வேலைகளுக்கு அப்பாற்பட்ட பணிகளைச் செய்யுமாறு பாதுகாப்பு அதிகாரிகளைக் கேட்பது அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று SASன் தலைவர் ராஜ் ஜோசுவா தாமஸ் தெரிவித்தார். சிங்கப்பூரில் சுமார் 50,000 உரிமம் பெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர் என்றும் ஜோசுவா தெரிவித்தார்.

மேலும் இந்த வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட மனிதவளத்துறை மூத்த அமைச்சர் ஜாக்கி மொஹமட், பாதுகாப்புத் துறையில் பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஒரு முக்கியமான தலைப்பு என்றார்.

Related posts