TamilSaaga

சிங்கப்பூர் வர டெஸ்ட் அடிக்க போறீங்களா? உங்கள் இன்ஸ்டிட்யூட் கம்பெனி போடுறோம்-னு சொல்றாங்களா? உடனே பணத்தை கொடுப்பதற்கு முன்பு இதைப் படிங்க

SINGAPORE: இன்றைய சூழலில், சிங்கப்பூர் வருவதற்கான Skilled Test quota-வை சிங்கை அரசு கணிசமாக குறைத்துவிட்டது என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். தோராயமாக சொல்ல வேண்டுமெனில், ஒரு இன்ஸ்டிட்யூட்டில் 300 quota-வரை கொடுத்துக் கொண்டிருந்த காலம் போய், இப்போது வெறும் 50 quota என்ற அளவுக்கு தான் கொடுக்கிறார்கள்.

இதற்கு காரணமும் நாம் முன்பே சொன்னது தான். டெஸ்ட் அடித்து certificate வாங்கிய பிறகும் கூட, பலரும் இன்னும் சிங்கப்பூர் வராமல் கால தாமதம் செய்து கொண்டிக்கின்றனர். குடும்ப சூழல், பணம் ரெடி பண்ண முடியல, குடும்பத்தில் துக்க நிகழ்வு, திடீர் கல்யாணம் என்று காரணங்களையும் அடுக்குகின்றனர்.

ஆனால், சிங்கப்பூர் அரசு இந்த காரணங்கள் எவற்றையும் ஏற்கவில்லை. இதன் விளைவாக quota-வை குறைத்துவிட்டது. இதில், இன்னொரு சிக்கல் என்னவெனில், டெஸ்ட் போடும் இன்ஸ்டிட்யூட்க்களில் பேசினால், பணத்தை கட்டிவிட்டு ஒரு மாதம் வரை வீட்டிலேயே காத்திருக்கச் சொல்கிறார்கள். ஒரு மாதத்துக்கு பிறகே பயிற்சிக்கு அழைப்பார்களாம்.

நிலைமை இப்படி சென்று கொண்டிருக்க, சில இன்ஸ்டிட்யூட்க்கள் நாங்களே கம்பெனி போட்டுத் தருகிறோம் என்று சொல்லி போட்டும் கொடுக்கிறார்கள். எனினும், இந்த விஷயத்தில் பணத்தை செலுத்தும் முன்பு நீங்கள் இன்னும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த செய்தி.

இதில் முதல் விஷயமாக நாம் பரிந்துரைப்பது, இன்ஸ்டிட்யூட்டில் பணம் செலுத்தி சேர்ந்து, சர்டிஃபிகேட் வாங்கிய பின்னர் அங்கேயே கம்பெனி போடாமல், உங்களுக்கு தெரிந்த ஏஜெண்ட் மூலம் போடுவது சிறந்தது. மீண்டும் சொல்கிறோம்… உங்களுக்கு நன்கு தெரிந்த, நன்கு பழக்கப்பட்ட, இந்த துறையில் முதிர்ச்சியான முன் அனுபவம் கொண்ட ஏஜெண்ட்டாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் டெஸ்ட் அடித்த பிறகு அவர்கள் மூலம் கம்பெனி போடுவதே சிறந்தது.

ஏனெனில், தெரிந்த ஏஜெண்ட் மூலம் தான், உங்களுக்கு நல்ல கம்பெனி கிடைக்கும். நல்ல முதலாளி கிடைப்பார். சிங்கப்பூரில் சென்று வேலை பார்ப்பது முக்கியமல்ல.. நீங்கள் வேலைப்பார்க்கும் இடமும், முதலாளியும் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைவது தான் முக்கியம். ஏதோ ஒரு கம்பெனிக்கு போனால் போதும் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். “பின் விளைவுகள்” கடுமையாக இருக்கும்.

மேலும் படிக்க – 1 பைசா கூட Flight Ticket-க்கு பணம் செலுத்த தேவையில்லை.. பெர்மிட்டும் தேவையில்லை.. சாங்கி ஏர்போர்ட்டுக்கே உங்களை அழைத்துச் செல்லும் “ChangiVerse” – உலகில் முதன் முதலாக கிடைக்கும் அனுபவம்!

அடுத்து, டாப் லெவல் இன்ஸ்டிட்யூட்க்களில் சேருவது. இந்த இரண்டாவது வகையும் உங்கள் வளர்ச்சிக்கு ஏற்ற ஒன்று தான். ஆம்! நீங்கள் தேர்வு செய்யும் இன்ஸ்டிட்யூட் தமிழகத்தின் டாப் லெவல் இன்ஸ்டிட்யூட்டாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் மூலம் கிடைக்கும் கம்பெனி அட்லீஸ்ட் ஓரளவுக்கு நல்ல கம்பெனியாக இருக்கும், நம்பியும் போகலாம்.

ஆனால், சில இன்ஸ்டியூட்கள் இதில் விதிவிலக்கு. அவர்களிடம் பணம் செலுத்தி சேருவதற்கு முன்பு, நெனெகல் அதிகம் யோசிக்க வேண்டும். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு உங்களை ஏமாற்ற முடியாது. ஆனால், அவர்கள் போட்டுக் கொடுக்கும் கம்பெனி, உங்களுக்கு சிக்கலாக அமையலாம். பணம் ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்ட நிறுவனமும், முதலாளியும் அமைந்துவிட்டால், சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் நரகம் தான்.

இதுபோன்ற இன்ஸ்டியூட்களில் நீங்கள் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பணம் செலுத்தி சேருவதற்கு முன்பு, ஒன்றே ஒன்றை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். அவர்களிடம், ‘கம்பெனியை ஓகே செய்வதற்கு முன்பு, என்ன கம்பெனி, எவ்வளவு சம்பளம் என்பதை உறுதி செய்த பிறகே, விசா போட வேண்டும் என்று சொல்லிவிடுங்கள். குறிப்பாக, உங்களது துறையில் தான் வேலை வேண்டும் என்பதையும் உறுதியாக சொல்லிவிடுங்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts