சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட் உலகின் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்று. அதுமட்டுமின்றி, இந்த 2023ம் ஆண்டின் உலகின் நம்பர்.1 ஏர்போர்ட் எனும் பெருமையும் நமது சாங்கி ஏர்போர்ட் வசம் தான் உள்ளது.
அந்தளவுக்கு தொழில்நுட்பம், பயணிகளை கையாளுதல், ஏர்போர்ட் வடிவமைப்பு, பயணிகள் சேவை, ஷாப்பிங் என்று அனைத்து பிரிவிலும் “ஆல் ரவுண்டர்” தரத்துடன் இயங்கி வருகிறது.
இந்நிலையில், மற்றொரு மகுடமாக ஒரு புதிய தொழில்நுட்பத்தில் இணைந்துள்ளது சாங்கி விமான நிலையம். ஆம்! “Roblox” என்றொரு இணையதளம் பற்றி உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இது ஆன்லைன் கேமிங் தளமாகும். தனது பயனர்களுக்கு Virtual online gaming மூலம் புதிய அனுபவத்தை கொடுத்து வருகிறது.
இந்த Roblox தளத்துடன் நமது சாங்கி ஏர்போர்ட் தற்போது இணைந்துள்ளது. இதன் மூலம், உலகில் முதன் முறையாக Virtual online gaming தளத்தில் இணைந்த மூலம் விமான நிலையம் எனும் பெருமையை சாங்கி ஏர்போர்ட் பெற்றுள்ளது.
சரி.. இதன் மூலம் என்ன செய்ய முடியும்?
அதாவது, நீங்கள் சாங்கி ஏர்போர்ட் போகாமலேயே, அங்கு சென்று வந்த அனுபவத்தை virtual மூலமாக பெறலாம். Virtual மூலமாக நீங்கள் ஏர்போர்ட் சென்று டிக்கெட் போடுவது, ஃபிளைட் சீட் தேர்வு செய்வது, பர்ச்சேசிங் செய்வது, லக்கேஜ் கோருவது என்று ஏர்போர்ட்டில் நீங்கள் நிஜத்தில் செய்யும் அனைத்து வேலைகளையும் virtual-ல் தத்ரூபமாக செய்து பார்க்கலாம். நிச்சயம் இது ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் சில புதிய நண்பர்களையும் நீங்கள் சம்பாதிக்க முடியும்.
Google Play, App Store, amazon appstore ஆகியவற்றில் நீங்கள் இந்த தளத்தை டவுன்லோட் செய்து கொண்டு, சாங்கி ஏர்போர்ட்டில் புதிய முயற்சியை அனுபவிக்க முடியும். அதாவது, உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும், இந்த தளம் மூலம் சாங்கி ஏர்போர்ட் சென்று வர முடியும்.