TamilSaaga

சிங்கப்பூர் தேசிய தினச் சடங்குப்பூர்வ அணிவகுப்பு : 600 பேருடன் ஆகஸ்ட் 9ம் தேதி அரங்கேறும்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு (NDP) இரண்டாம் கட்ட High Alter கட்டுப்பாடு எச்சரிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் 21ம் தேதி நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF) கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி தெரிவித்தது. சிங்கப்பூர் தேசிய தினமான ஆகஸ்ட் 9ம் தேதிக்கு பதிலாக ஒரு சடங்கு அணிவகுப்பாக மாற்றி வைக்கப்பட்ட தேதியில் நடைபெறும் என அறிவித்தது.

“இது கடந்த ஆண்டு நடந்ததை போலவே இருக்கும் ஆனால் இந்த ஆண்டு மரீனா பே பகுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. “ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய வார இறுதி நாட்களில் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட ஹார்ட்லேண்ட் பட்டாசு மற்றும் ரெட் லயன்ஸ் காட்சிகள் ரத்து செய்யப்படும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே ஜூலை 24 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்ட NDP ஒத்திகை மற்றும் முன்னோட்ட நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. தேசிய தின உரையும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேசிய தினச் சடங்குப்பூர்வ அணிவகுப்பு வரும் ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூர் ஆயுதப்படைகள் (SAF) மற்றும் உள்நாட்டு அணியைச் சேர்ந்த சுமார் 600 பங்கேற்பாளர்களுடன் மரீனா பே பகுதியில் நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF) இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Related posts