சிங்கப்பூரில் கட்டடத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள். கட்டட தொழிலின் போது நடக்கும் கவனமின்மை காரணமாக நடக்கும் விபத்துகளைப் பற்றி நாம் அவ்வப்போது செய்திகள் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றோம். இந்நிலையில் அந்த செய்திகளின் பட்டியலில் தற்பொழுது அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
பங்களாதேஷை சேர்ந்த வெளிநாட்டவர் கட்டட பணியின் பொழுது 10வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்பவாங்கில் சன் செய்ல்ஸ் என்ற பெயரில் அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படுகின்றன.
அப்பொழுது கட்டடக் கழிவுகளை அப்புறப்படுத்தும் லிப்ட் இயந்திரம் தொழிலாளியின் மீது தாக்கியதின் காரணமாக பத்தாவது மாடியில் இருந்து தொழிலாளி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து மனிதவள அமைச்சகம் மேற்கொண்ட விசாரணையில் கட்டடத்தின் பத்தாவது மாடியில் இருந்து வெயிட் லிப்ட் இயந்திரம் கட்டிடக்கழிவுகள் நிறைந்த தொட்டியை தூக்குவதற்காக தொழிலாளி வழி வழிகாட்டிக் கொண்டிருந்தார் என்றும் அந்தரத்தில் இருந்த தொட்டி அவர் மீது மோதியதன் காரணமாக அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
முதலில் தொழிலாளி அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் சுயநினைவு இழந்ததால் இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கட்டடப் பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.