சந்திரயான்-3 விண்கலம் நிலவில் எப்பொழுது தடம் பதிக்கும் என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் இறங்கினால், நிலவின் தென் துருவத்தை முதலில் அடைந்த நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். ஆனால் தற்பொழுது இந்த வெண்கலத்தினை பற்றிய சுவாரசிய சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது.
சந்திரயான் விண்கலமானது நிலவில் தடம்பதிக்கும் முன்பே, நாமக்கல் மண்ணில் தடம் பதித்தது என்ற தகவல் கிடைத்துள்ளது. உலக நாடுகளுக்கு போட்டியாக முதன்முதலாக சந்திரயான்-1 என்ற விண்கலத்தினை 2008 ஆம் ஆண்டு நிலவின் வடதுருவத்திற்கு முதன் முதலாக அனுப்பியது. அதன் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதாக முதலில் கண்டறிந்து உலக நாடுகளுக்கு கூறியது. அதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு சந்திரயான்-2 GSLV ராக்கெட் மூலம் விண்ணிற்கு செலுத்தப்பட்டது.
ஆனால் அத்திட்டம் வெற்றியடையாமல் விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் மோதி உடைந்தது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த இஸ்ரோ நிறுவனம், நிலவின் பரப்பை போன்றே உருவாக்கி அதில் முதலில் விக்ரம் லாண்டரை சோதித்து பார்க்கலாம் என்ற முடிவிற்கு வந்தது. இந்நிலையில் நிலவில் இருப்பது போன்றே மண் வேண்டுமானால் நாசாவிடம் தான் வாங்க வேண்டும். ஒரு கிலோ மண்ணை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதற்கு NASA தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அதிக அளவில் பொருள் செலவு ஆகும் என்பதால் அதே போன்று மண் எங்கு உள்ளது என்பதை இஸ்ரோ ஆராய்ச்சி செய்தது.
இந்த ஆராய்ச்சியில் நாமக்கல்லில் உள்ள குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி பகுதிகளில் நிலவின் மேற்பரப்பில் உள்ளது போன்றது மண் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, இந்த மண்ணை கொண்டு முதல் முதலாக சந்திரயான்-3 விண்கலத்தினை பரிசோதித்த பின்பே விஞ்ஞானிகள் நிலவிற்கு அனுப்பினர். அந்த வகையில் பார்த்தால் விக்ரம் லண்டனை முதலில் தாங்கிய பெருமையை நாமக்கல் மண்தான் பெறும்.