சிங்கப்பூரில் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 1) முதல் முஸ்லீம் மார்கத்தை சார்ந்த செவிலியர்கள், துடுங்கு அணிந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால், அவர்கள் தங்கள் சொந்த “முக்காடுகளை”ப் பயன்படுத்தலாம் என்று மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நேஷனல் ஹெல்த்கேர் குழுமத்தின் தலைமை மனித வள அதிகாரி திருமதி ஒலிவியா டே, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசியபோது, செவிலியர்கள் கருப்பு, நேவி நீலம் அல்லது வெள்ளை துடுங் அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
N95 அறுவைசிகிச்சை முகமூடியின் சரியான பயன்பாட்டிலும் அந்த துடுங் இடையூறாக இருக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார். “துடுங்குடன் N95 முகமூடியை அணியும்போது, அதை அணிந்திருக்கும் அனைத்து ஊழியர்களும் சரியான முறையில் முகமூடி அணிவதை உறுதிசெய்ய, துடுங்குடன் கூடிய முகமூடிகளில் எந்த நீட்டிப்பு அல்லது மாற்றங்களும் இல்லாமல் நன்கு பொருத்தப்பட்டு நோய் பரவலுக்கு அனுமதி அளிக்காமல் பொருத்தப்பட வேண்டும்,” என்று திருமதி டே கூறினார்.
சிங்கப்பூரின் நேஷனல் யுனிவர்சிட்டி ஹெல்த் சிஸ்டம் (NUHS) அதன் செவிலியர்கள் தங்கள் தலையில் எந்த அலங்காரத்தையும் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், குளிரூட்டப்படாத அமைப்புகளில் பணிபுரிந்தால் சுவாசிக்கக்கூடிய அல்லது வியர்வை-துடைக்கும் பொருட்களால் செய்யப்பட்டவற்றைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் கூறியது. அறுவைசிகிச்சை அரங்குகள் போன்ற கடுமையான தூய்மை தேவைப்படும் அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் முக்காடு அனுமதிக்கப்படாது என்றும் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
SingHealth குழுமத்தின் தலைமை செவிலியர், இணை பேராசிரியர் ட்ரேசி கரோல் அயர் பேசுகையில் “நடைமுறையில் உள்ள தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, பணியாளர்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் தொப்பிகளைப் பயன்படுத்துவதைத் தொடர வேண்டும்.” என்றார்