சிங்கப்பூர், உலகின் மிகவும் முன்னேறிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும், வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு ஒரு கனவு இடமாக உள்ளது. இந்தியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் வேலை பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், அங்கு வேலை செய்ய வேண்டுமெனில், சரியான வொர்க் பெர்மிட் அவசியம். இதில் முக்கியமானவை PCM (Process Construction and Maintenance) பெர்மிட் மற்றும் ஸ்கில்டு வொர்க் பெர்மிட் (Skilled Work Permit). இந்த இரண்டு பெர்மிட்களுக்கும் என்ன வித்தியாசம்? எது உங்களுக்கு பொருத்தமானது?
PCM என்றால் என்ன?
PCM என்பது ‘Process Construction and Maintenance’ என்பதன் சுருக்கமாகும். இது சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஒரு சிறப்பு வகையான வேலை அனுமதி.
இந்த PCM பணி அனுமதி பெற்றவர்கள், தொழிற்சாலைகளைக் கட்டுவது, தொழிற்சாலை இயந்திரங்களைப் பராமரிப்பது, மற்றும் தொழிற்சாலைகளில் நடக்கும் உற்பத்தி வேலைகளில் ஈடுபடுவது போன்ற பணிகளைச் செய்வார்கள்.
சம்பளம் மற்றும் செலவுகள்:
- PCM பெர்மிட் வைத்திருப்பவர்களுக்கு சம்பளம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் (தோராயமாக S$800-$1,200 மாதாந்திரம்).
- ஆனால், வாடகை, மின்சாரம், தண்ணீர் போன்ற பிடித்தங்கள் இருப்பதால், வீட்டுக்கு அனுப்பப்படும் பணம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
- PCM பெர்மிட் பெறுவதற்கு அடிப்படை கல்வித் தகுதி தேவையில்லை.
PCM பணிகளுக்கு இந்த 13 (Skills) திறன் தொகுப்புகள் தேவை:
- Electrical and Instrumentation works
- General fitting
- Machine fitting
- Metal Scaffolding
- Painting and blasting
- Plant civil works
- Plant equipment fitting
- Process pipefitting
- Refractory
- Rigging and material handling
- Rotating equipment fitting
- Thermal insulation
- Welding
விண்ணப்பிக்கும் முறை:
பொதுவாக, PCM வேலை அனுமதிக்கு ஏஜென்சிகள் (நிறுவனங்கள்) மூலமாக விண்ணப்பிப்பது வழக்கம். இந்த ஏஜென்சிகள், எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் போன்ற விஷயங்களை உங்களுக்கு விளக்குவார்கள்.
சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Manpower – MOM) இணையதளத்திலும் இந்த வேலை அனுமதி பற்றிய அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
ஸ்கில்டு வொர்க் பெர்மிட் என்றால் என்ன?
ஸ்கில்டு வொர்க் பெர்மிட் (Skilled Work Permit) என்பது குறிப்பிட்ட திறன்களைக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வேலை அனுமதி. இதற்கு முறையான பயிற்சி மற்றும் திறன் சான்றிதழ் (Skill Certificate) தேவை. இந்த பெர்மிட் கட்டுமானம், உற்பத்தி, கப்பல் கட்டுதல், சேவைத் துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
யாருக்கு இது பொருந்தும்?
திறன் சான்றிதழ் தேவை: தமிழ்நாடு போன்ற இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஸ்கில் சென்டர்களில் 45-60 நாட்கள் பயிற்சி பெற்று, தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தொழில்கள்: எலக்ட்ரிக்கல், வெல்டிங், கார்பென்ட்ரி, டிரைவர் போன்ற திறன் சார்ந்த வேலைகளுக்கு இது பொருந்தும்.
நாடுகள்: PCM பெர்மிட் போலவே, இந்தியா, மலேசியா, சீனா உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திறன் சார்ந்த வேலை என்பதால், சம்பளம் மற்றும் வேலை நிலைத்தன்மை PCM பெர்மிட்டை விட சிறப்பாக இருக்கும்.
நீண்ட காலம் (பொதுவாக 14-26 வருடங்கள்) சிங்கப்பூரில் பணிபுரிய முடியும், குறிப்பாக உயர் திறன் (R1) வகைப்பாட்டில்.
எது சிறந்தது? – ஒரு ஒப்பீடு
1. கல்வி மற்றும் திறன் தேவைகள்:
PCM பெர்மிட்: கல்வி அல்லது முன் அனுபவம் தேவையில்லை. ஆனால், உடல் உழைப்பு மற்றும் கடினமான வேலை சூழல் இருக்கும்.
ஸ்கில்டு வொர்க் பெர்மிட்: முறையான பயிற்சி மற்றும் சான்றிதழ் தேவை. திறன் சார்ந்த வேலைகளுக்கு முன்னுரிமை.
PCM: வேலை சுமை அதிகம், ஆனால் நீண்ட கால வேலை வாய்ப்பு குறைவு.
ஸ்கில்டு: உயர் திறன் வகைப்பாடு (R1) இருந்தால், 26 ஆண்டுகள் வரை வேலை செய்ய முடியும்.
PCM: குறைந்த சம்பளம், அதிக பிடித்தங்கள். வீட்டுக்கு அனுப்பப்படும் பணம் குறைவாக இருக்கும்.
சாங்கி விமான நிலையத்தில் திருட்டு – இரு இந்திய பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!
ஸ்கில்டு: சற்று அதிக சம்பளம், மேலும் திறன் மேம்பாடு மூலம் உயர்வு பெற வாய்ப்பு உள்ளது.
உங்கள் கல்வித் தகுதி, திறன்கள் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றைப் பொறுத்து இந்த இரண்டு பெர்மிட்களில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். சிங்கப்பூரின் வேலை சந்தையில் வெற்றிபெற, சரியான திட்டமிடல் மற்றும் நம்பகமான ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம்.
சிங்கப்பூரின் வேலை அனுமதி விதிமுறைகள் அவ்வப்போது மாறலாம். எனவே, மிகவும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு Singapore Ministry of Manpower (MOM) இணையதளத்தை பார்வையிடவும் அல்லது தொழில்முறை ஆலோசகர்களை அணுகவும்.