TamilSaaga

சிங்கப்பூர் Orange Grove சாலை.. கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை – என்ன காரணம்? முழு விவரம்

சிங்கப்பூர் – ஷாங்க்ரி-லா ஹோட்டலுக்கு அருகிலுள்ள சாலைகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை (ஆகஸ்ட் 22 முதல் 24 வரை) வாகன ஓட்டிகள் தாமதத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்டர்சன் சாலை மற்றும் Orange Grove சாலையில் உள்ள வாகனங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு சோதனைகளை நடத்துவார்கள் என்று சிங்கப்பூர் போலீஸ் படை இன்று சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், ஷாங்க்ரி-லா ஹோட்டலுக்குள் பார்க்கிங் செய்வதும் கட்டுக்குள் கொண்டுவரப்படும். மேலும் ஹோட்டலுக்கு வருபவர்கள் கார்பூல் அல்லது பொதுப் போக்குவரத்தில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Orange Grove சாலைக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்களை ஓட்டுபவர்கள் ஆண்டர்சன் சாலையைப் பயன்படுத்தலாம் மற்றும் அவர்கள் Orange Grove சாலைக்குச் செல்வதற்கு முன் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று காவல்துறை மேலும் கூறியுள்ளது.

Related posts