TamilSaaga

“சிங்கப்பூரில் தீபாவளியை முன்னிட்டு ஐந்து மணி நேர நிகழ்ச்சி” – தயாராகும் லிட்டில் இந்தியா?

சிங்கப்பூரில் அடுத்த வாரம் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளது. இந்த பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் இரண்டாவது ஆண்டாக இந்த கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் (LiSHA) அதன் தீபாவளி 2021 ஆம் ஆண்டு ஆன்லைன் மற்றும் கலப்பினச் செயல்பாடுகளை செப்டம்பர் 25ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 28 அன்று லிட்டில் இந்தியாவில் பாரம்பரிய கொண்டாட்டங்களை நடத்தவுள்ளது.

அங்கு செயல்படும் இரவு பஜார்கள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், டிக்டோக் நடன சவால்கள், உணவு சமைக்கும் போட்டி, போன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. நவம்பர் 4ம் தேதி உலக அளவில் தமிழர்கள் ஒளியின் திருவிழாவாக கொண்டாடும் ஒரு நிகழ்வு தான் தீபஒளி திருநாளாம் தீபாவளி. சிங்கப்பூரிலும் இந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக இந்த பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

மேலும் முதன்முறையாக, சிங்கப்பூரில் நடைபெறும் கொண்டாட்டங்களில் ஐந்து மணிநேர நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன, அவை உலகெங்கிலும் உள்ள தமிழ் சங்கங்கள் தங்கள் முகநூல் பக்கங்களில் Live செய்ய உள்ளன. மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் புதுயுகம் என்ற தொலைக்காட்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபியூஷன் மியூசிக் தொடங்கி இந்தியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த பேச்சாளர்களின் நிகழ்ச்சிகள் வரை, அனைத்து தீபாவளி நிகழ்ச்சிகளும் சிங்கப்பூரில் படமாக்கப்படும், அதன் ஒரு பகுதியை சென்னையில் உள்ள தமிழ் மொழி சேனலான புதுயுகம் டிவி ஒளிபரப்பும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல செய்தி நிறுவனமான ஸ்ட்ரெயிட் டைம்ஸ் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

LiSHA குழுமத்தின் ஆலோசகர் ராஜகுமார் சந்திரா, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசியபோது தீபாவளி திருநாளை முன்னிட்டு இங்குள்ள தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மகிழ்விக்க பல நிகழ்ச்சிகளின் தொகுப்பை LiSHA இலக்கியக் கழகம் உருவாக்கியுள்ளது என்றார்.

Related posts