சிங்கப்பூரில் சுமார் 1,13,000 உழைக்கும் மக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை, அவர்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே மருத்துவ ரீதியாக தடுப்பூசிக்கு தகுதியற்றவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசி போடப்படாத தொழிலாளர்களில் சுமார் 14,000 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்கள் கடுமையான நோய் அல்லது நோய்த்தொற்றால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர். இந்த புள்ளிவிவரங்களை சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 23) வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று சனிக்கிழமையன்று, பெருந்தொற்று தொடர்பான பல அமைச்சக பணிக்குழு, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் அல்லது கடந்த 270 நாட்களுக்குள் தொற்றிலிருந்து மீண்டவர்களை மட்டுமே அடுத்த ஆண்டு முதல் பணியிடத்திற்குத் திரும்ப அனுமதிக்கும் புதிய நடவடிக்கைகளை அறிவித்தது.
தடுப்பூசி போடப்படாதவர்கள் பணியிடத்திற்குத் திரும்புவதற்கு முன், தொற்றின் நெகட்டிவ் பரிசோதனை செய்ய வேண்டும். 24 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் இந்த ஆன்டிஜென் விரைவு சோதனைகளுக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும். MOH மற்றும் MOM அக்டோபர் 17 இல், சிங்கப்பூரின் 96 சதவீத பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 70 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 100 சதவீத தடுப்பூசி கவரேஜ் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
சினோவாக் உட்பட தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து தடுப்பூசிகளுக்கும் மருத்துவ ரீதியாக தகுதியற்ற பணியாளர்கள் தளத்தில் வேலை செய்ய வேண்டியிருந்தால், பணியாளர் தடுப்பூசி நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சகங்கள் மேலும் தெரிவித்தது.
கர்ப்பிணி ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி போட வேண்டும் என்றும் அமைச்சகங்கள் வலியுறுத்தியுள்ளன