TamilSaaga

“நாம சாகப்போறோம்”.. விளையாட்டாய் சொன்ன ஜோக்.. புத்தம் புதிய BMW காரில் 230 கி.மீ வேகம்.. வாழ வேண்டிய வயதில் ஆயிரம் பேர் பார்க்க ஃபேஸ்புக் Live-லேயே பறிபோன 4 உயிர்

ஒருவருக்கு தன் உயிர் போகும் முன்பு, ஏதோ ஒரு வகையில் அந்த உண்மையை அவர் உணருவார் என்று சொல்வார்கள். அது உண்மையா, பொய்யா என்று தெரியாது. ஆனால், இந்த நான்கு நண்பர்கள் விஷயத்தில் அது உண்மையாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆனந்த் பிரகாஷ். 35 வயதான இவர் பீகாரில் உள்ள மெடிக்கல் காலேஜில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் இவர் தனது புத்தம் புதிய BMW காரில் தனது நண்பர்கள் தீபக் குமார் (என்ஜினியர்), ரியல் எஸ்டேட் வியாபாரி அகிலேஷ் சிங், தொழிலதிபர் முகேஷ் ஆகிய மூன்று பேருடன் சென்றிருக்கிறார்.

மருத்துவர் ஆனந்த் பிரகாஷ் தான் காரை ஓட்டியுள்ளார். அப்போது, நால்வரும் காரை 300 கி.மீ வேகத்தில் அந்த காரில் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து, அதை தங்களது ஃபாலோயர்ஸும் பார்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பேஸ்புக்கில் நேரலை செய்திருக்கின்றனர்.

பின் சீட்டில் அமர்ந்திருந்த நண்பர்களில் ஒருவர், தங்கள் (இறுதி) பயணத்தை முகநூலில் நேரலை செய்து கொண்டே ‘நாம எல்லாம் சாகப்போறோம்’ என்று உணர்ச்சி மிகுதியில் சொல்லியிருக்கிறார்.

மேலும் படிக்க – “மூணு மாசமா சம்பளமே கொடுக்கல”… சிங்கப்பூரில் லாரியை நிறுத்தி “Entrance”-ஐ மறித்த 9 வெளிநாட்டு ஊழியர்கள்! சிங்கையில் இதுவரை எந்த ஊழியரும் செய்ய நினைத்துக் கூட பார்க்காத சம்பவம்!

புயல் வேகத்தில் சீறிப் பாய்ந்த கார் 230 கி.மீ வேகத்தை எட்டிய போது, உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் சென்றுக் கொண்டிருக்கையில், முன்னே சென்றுக் கொண்டிருந்த லாரியின் மீது பயங்கர சப்தத்துடன் மோதியது.

இதில், லாரிக்கு அடியில் சென்ற கார் அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் பலியானார்கள். இந்த சம்பவம் அனைத்தையும் லைவ் வீடியோவில் நூற்றுக்கணக்கான அவரது ஃபாலோயர்கள் பார்த்தனர்.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பிரகாஷின் மாமனார் ஏ.கே.சிங், டெல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவன உரிமையாளரிடம் இருந்து தனது மருமகன் பிஎம்டபிள்யூ காரை வாங்கினார்’ என்று தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து சுல்தான்பூர் காவல் கண்காணிப்பாளர் சோமன் பர்மா கூறுகையில், “இந்த விபத்து பற்றி அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தலைமறைவான டிரக் டிரைவரைப் பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts