கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி, புதன்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள உலு பாண்டன் கால்வாயில் இருந்த பெரிய மலைப்பாம்பை ஒரு மானிட்டர் லிசார்ட் என்று அழைக்கப்படும் ராட்சச பல்லி ஒன்று கடித்து உண்ணும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிங்கப்பூர் போன்ற நவநாகரீக நகர்ப்புறக் நாட்டில், இயற்கை தன் பாதையில் இயங்கிய இந்த கட்சியை அன்று அவ்வழியாகச் சென்றவர்கள் கண்டு மிரண்டனர்.
அந்த ராட்சச பல்லியின் உணவு நேரத்தை வெவ்வேறு கோணங்களில் ஆவணப்படுத்தும் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டன. பல நகர்ப்புறங்களில் இதுபோன்ற ஒரு சென்சார் செய்யப்படாத இயற்கை விதியை காண்பதென்பது நிச்சயம் அபூர்வமான ஒன்றுதான். பொதுவாக மலைப்பாம்புகள் நெறுக்கிக்கொள்ளும் வகையை சேர்ந்தவை, தன்னை விட உருவத்தில் சிறிய விலங்குகள் எதுவாயினும் அவற்றை நசுக்கி கொன்று விழுங்கும் திறன்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மலைப்பாம்பை கடித்துக்கொன்ற ராட்சச பல்லி
ஆனால் ஒரு Monitor Lizard என்பது பல நூற்றாண்டுகளாக உணவுச்சங்கிலியில் உயரத்தில் உள்ள ஒரு கொடிய கொலைகார விலங்கு. அதிக தாடை சக்தி கொண்ட ஒரு ராட்சச பல்லிக்கு மலைப்பாம்பு என்பது ஒரு எளிய இறைதான். அதேநேரத்தில் இந்த மானிட்டர் லிசார்ட் விஷயத்தில் அது விழுங்க துவங்கியது பெரிய மலைப்பாம்பு என்பதால் ஒருகட்டத்தில் அந்த பாம்பை மேற்கொண்டு விழுங்கமுடியாமல் கக்கியதை மக்கள் கண்டனர். மேலும் அந்த கால்வாயின் அடிப்பகுதியில் பாம்பின் சடலத்தை விட்டுச் செல்வதற்கு முன்பு அதில் பத்தியை தின்றுமுடித்தது.
அதே நேரத்தில் சிங்கப்பூரில் இதுபோன்று ஒரு மலைப்பாம்பு ஒரு ராட்சச பல்லியால் கொல்லப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இரண்டு மானிட்டர் பல்லிகள் போடோங் பாசிரில் இறந்த மலைப்பாம்பை உண்பது காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.