சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் கடந்த 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரை பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை (SMMs) மீறும் முதலாளிகள் குறித்து சராசரியாக ஒரு மாதத்திற்கு சுமார் 640 பின்னுட்டங்களை (Feed Backs) பெற்றுள்ளது என்று MOM செய்தித் தொடர்பாளர் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 6) CNAவிடம் கூறியுள்ளார். “உதாரணமாக, மே 20 நடுப்பகுதியிலிருந்து ஜூலை 2021 வரை, MOM 3,500-க்கும் மேற்பட்ட பின்னுட்டங்களை (Feed Back) பெற்றது. மே 2021ல் 2ம் கட்ட உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு இந்த Feed Backகளின் அளவு கணிசமான அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டது.
Safe Management Measures எனப்படும் SMM-களை தங்கள் முதலாளிகள் மீறுவதைக் கவனித்தால் ஊழியர்கள் என்ன செய்ய முடியும் என்ற CNAவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அமைச்சகம் “SMM-களைச் செயல்படுத்துவது குறித்து அவர்களுக்கு இருக்கும் கவலையைத் தெளிவுபடுத்த முதலில் தங்கள் முதலாளிகளை அணுக வேண்டும்” என்று கூறியது. மேலும் MOM-ன் வலைத்தளம் : www.mom.gov.sg/report-wsh-issue மூலம் ஊழியர்கள் இத்தகைய மீறல்களைப் பற்றி புகாரளிக்கலாம். “அனைத்து அறிக்கைகளும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பெருந்தொற்று பரவல் அபாயத்தைக் குறைக்க “முதலாளிகள் மற்றும் பணியாளர்கள்” சமூகப் பொறுப்பைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் SMM-கள் சரியாக செயல்படுத்தப்படுவதையும், பணியிடத்தில் கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்ய தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என்று MOM தெரிவித்துள்ளது. SMM-களைச் செயல்படுத்தத் தவறும் நிறுவனங்கள் அபராதத்தை எதிர்கொள்ளலாம் அல்லது கடுமையான விதி மீறல்களுக்காக நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிடலாம் என்று அமைச்சகம் மேலும் எச்சரித்தது.
கடந்த ஜூலை மாதத்தில், பணியிடங்களில் பெருந்தொற்று நடவடிக்கைகளுக்கு இணங்கத் தவறியதற்காக மே நடுப்பகுதியில் இருந்து 66 நிறுவனங்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் அறிவித்தது.