TamilSaaga

சிங்கப்பூரில் Work Permit விதிகளில் அதிரடி மாற்றம்… புதிய துறையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாய்ப்புகள்! MOM கொண்டு வந்த புதிய மாற்றம்…..

சிங்கப்பூர், மார்ச் 07, 2025 – சிங்கப்பூர் அரசு வெளிநாட்டு ஊழியர்களை வேலை அனுமதி (Work Permit) முறையில் அழைப்பதற்கான விதிகளை தளர்த்தி, கூடுதல் வேலைவாய்ப்புகளுக்கு அனுமதி அளிக்க உள்ளது. இதுவரை S Pass அனுமதியின் கீழ் அழைக்கப்பட்ட ஊழியர்களை, இனி வேலை அனுமதி அட்டை முறையில் அழைக்கலாம் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அறிவித்துள்ளார்.

இந்த மாற்றத்தின் மூலம், இந்திய உணவகங்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகையான உணவகங்களுக்கும் சமையல்காரர்களை பணியமர்த்த அனுமதி வழங்கப்படுகிறது. இது உணவகத் துறையில் பணியாளர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் உற்பத்தித் துறையைச் சேர்ந்த சில ஊழியர்களையும் இத்திட்டத்தின் கீழ் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2025 செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும். இதற்கு முன்னதாக, 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், ஹோட்டல் துறை, உற்பத்தித் துறை மற்றும் உணவுத் தயாரிப்பு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, மியன்மார், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இம்முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் தெரிவித்ததின் படி, ஜூன் மாதம் முதல் பூட்டான், கம்போடியா, மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளிலிருந்தும் Work Permit-யின் கீழ் ஊழியர்களைத் தருவிக்க முடியும்.

இந்த புதிய நடைமுறை வேலைசெய்யக்கூடிய திறமையான வெளிநாட்டு ஊழியர்களின் வருகையை விரிவுபடுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இது தற்போது குறிப்பிட்ட மூன்று நாடுகளுக்கும் பொருந்தும் மற்றும் முந்தைய S Pass முறையின் கீழ் கிடைக்காத வாய்ப்புகளை இவைப் பெறுவதற்கான வழியைத் திறக்கிறது.

 

சிங்கப்பூரில் Work Permit, S-Pass-ல்  வேலை பார்ப்பவர்களுக்கு சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பு!!  சம்பள உயர்வு, புதிய Quotaகள்….MOM சொன்ன புதிய அறிவிப்புகள் என்ன?

மனிதவள அமைச்சர் டான் சீ லெங், உணவகத் துறையில் அனைத்து வகையான சமையல்காரர்களுக்கும் வேலை அனுமதி வழங்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இப்போது கனரக வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பிற துறைகளையும் சேர்ப்பதன் மூலம், பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

மனிதவள அமைச்சகத்தின் இந்த முடிவு, உள்ளூர் வேலைவாய்ப்புகளை பாதிக்காமல், வெளிநாட்டு திறமையை சிறப்பாக பயன்படுத்துவதற்கான ஒரு சமநிலையை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. இதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts