TamilSaaga

சிங்கப்பூரின் Concord சர்வதேச மருத்துவமனை மீண்டும் செயல்பட அனுமதி – MOH வழங்கிய நிபந்தனைகள்

சிங்கப்பூர் ஆடம் சாலையில் இயங்கி வந்த கான்கார்ட் சர்வதேச மருத்துவமனை நோயாளிகளின் பாதுகாப்பு பாதிக்கும் வகையிலான குறைபாடுகளை கொண்டுள்ளது என்பதற்காக அதன் சேவைகள் 2020 டிசம்பர்.19 முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஆப்ரேஷன் தியேட்டர்களில் உயிர்காக்கும் சாதனங்கள், நோயாளிகளுக்கு பயன்படும் உபகரணங்கள் ஆகியவை சரியாக பராமரிக்கப்படவில்லை அல்லது தேவையான அளவு இல்லை என MOH தெரிவித்திருந்தது.

இந்த மருத்துவமனையின் தொற்று கட்டுப்பாடு செயல்முறைகள் மற்றும் தரக்கட்டுப்பாடுகளில் குறைபாடு இருந்ததாகவும் அதனால் நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துக்கள் ஏற்பட்டதாகவும் அமைச்ககம் தெரிவித்தது.

தற்போது இந்த மருத்துவமனை குறைபாடுகளை சரிசெய்துள்ளது. MOH ஆல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மருத்துவமனை மற்றும் மருத்துவ சட்டத்தின் கீழ் உள்ள தேவைகளை பூர்த்தி செய்துள்ளது.

அனைத்து மருத்துவமனை பகுதியிலும் தேவையான உபகரணங்கள், வசிதிகள், ஆய்வக வசதி, தரக்கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை MOH சோதனை செய்தது. நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தரக்கட்டுப்பாடு சோதனை முடிவுகளை அனுப்புவது போன்றவற்றையும் உள்ளடக்கிய சோதனையை மருத்துவமனை பூர்த்தி செய்தது.

மருத்துவமனை மீண்டும் தனது செயல்பாடுகளை துவங்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உரிமத்தை இரண்டு வருட காலத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் புதிய பெயரில் அதே வளாகத்தில் மருத்துவமனையை நடத்த MOH தெரிவித்துள்ளது.

Related posts