சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் நிர்ணயித்துள்ள வேலை அனுமதி நிபந்தனைகள் அனைத்திற்கும் அனைவரும் உட்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார். சிங்கப்பூரில் தற்போது பணி புரிந்து வரும் நிபுணர்கள், மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளில் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் 3 லட்சத்தி 80 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2005-ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பிற நாடுகளிலிருந்து ஊழியர்களை சிங்கப்பூருக்கு கொண்டு வந்தாலுமே வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர்வாசிகளுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு தருவதை இது குறிப்பதாக அமைச்சர் கூறினார்.
தகவல்தொடர்பு, நிதி போன்ற துறைகளில் உள்ள சுமார் 45 ஆயிரம் வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சிங்கப்பூர் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
சிங்கப்பூரர்களின் தன்மையை மேம்படுத்தும் திறன்கொண்ட வெளிநாட்டவர்களே பெரும்பாலும் இங்கு பணியமர்த்தப்படுவதாக அவர் கூறினார்.