சிங்கப்பூரில் இன்றைய தினம் முதல் அக்டோபர் 31, 2022 வரை, சென்டோசா தீவுக்கான membership வைத்திருப்பவர்களுக்கு சென்டோசா லைன் வழியாக செல்ல இலவச கேபிள் கார் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதில் பயணிக்கும் விருந்தினர்கள் சென்டோசாவின் காடுகளின் எழில்கொஞ்சும் அழகையும், பசுமையான சுற்றுசூழல் மற்றும் அதை சுற்றியுள்ள கடற்கரையின் காட்சிகளையும் அனுபவிக்க முடியும். சரி Memberகள் மட்டும்தான் இதில் பயணம் செய்ய முடியும் என்றால் membership வாங்குவது எப்படி?
Membership வாங்குவது கடினமா? எவ்வளவு செலவு ஆகும்?
உண்மையில் சொல்லப்போனால் இந்த membershipக்கு வெறுமனே onlineல் பதிவு செய்தால் போதுமானது. அதுவும் Free தான்.
வெளிநாட்டு ஊழியர்கள் Free Membership பெறமுடியுமா?
தற்போதுள்ள விதிகளின்படி முடியாது என்படுத் தான் பதில் காரணம் இந்த membership பெற நீங்கள் சிங்கப்பூர் குடிமகன் அல்லது சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளர்களாக தங்கள் “சிங்பாஸ்” மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த இலவச சவாரியை பெற, சிங்கப்பூர் கேபிள் கார் டிக்கெட் கவுன்டர்களில் தங்கள் உறுப்பினர் கணக்கு மற்றும் QR குறியீட்டை சமர்ப்பித்து இலவச டிக்கெட்களை பெறலாம்.
குறிப்பு : குறிப்பிட்ட rides மட்டுமே இலவசமாக வழங்கப்படும்