கடந்த இரண்டு ஆண்டுகள் என்பது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு இக்கட்டான காலமே என்றால் அது நிச்சியம் மிகையல்ல. அந்த அளவிற்கு இந்த தொற்றுநோயின் தாக்கம் நம்மை வாட்டிவதைத்து வருகின்றது. அதேபோல இந்த பெருந்தொற்று சூழல் நமது சிங்கப்பூர் வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒரு சோதனைகாலமாகவே கடந்த பல மாதங்களாக இருந்து வந்தது. தடுப்பூசிகள் பல கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது Dormitoryகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : சிக்கிய 2 மோசடி கும்பல்
இந்நிலையில் பெருமாள் ராகுல்காந்தி என்ற சிங்கப்பூர் வாழ் இந்திய புலம்பெயர் தொழிலாளரின் வாழ்க்கை பலருக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. இதுகுறித்து மனிதவள அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி “அவர் அனுபவித்த மன அழுத்தங்கள், அந்த 28 வயது இளைஞரை தனது சக ஊழியர்களின் ஆதரவுத் தலைவராக தன்னார்வத் தொண்டு செய்யத் தூண்டியது. இதேபோன்ற போராட்டங்களைச் சந்திக்கும் இங்குள்ள சக ஊழியர்களுக்கு தனது உதவியை தற்போது வழங்கி வருகின்றார் ராகுல்”.
“ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் சிங்கப்பூருக்கு வேலைக்காக வந்தார், இங்குள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் போலவே, இந்தியாவில் உள்ள தனது குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதே அவரது குறிக்கோளாக இருந்தது”. “சிங்கப்பூர் ஒரு நல்ல பாதுகாப்பான இடம் என்று கேள்விப்பட்டதால் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தேன்” என்று ராகுல் கூறினார், அவருடைய மாமா ஏற்கனவே இங்கு ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒரு முகவருடன் தொடர்பு கொண்ட பிறகு, அவர் இறுதியில் சுங்கே தெங்காவில் அமைந்துள்ள நர்சரி மற்றும் இயற்கை வடிவமைப்பு நிறுவனமான பிரின்ஸ் லேண்ட்ஸ்கேப்பில் உதவியாளராக வேலை பெற்றார். சிங்கப்பூரில் என்னுடைய சக ஊழியர்களும் முதலாளிகளும் என்னை வழிநடத்துவதன் மூலம் மிகவும் உதவியாகவும் நட்பாகவும் இருந்துவருகின்றன. நர்சரியில் உள்ள தாவரங்களை பராமரிப்பது மற்றும் வாடிக்கையாளர் சேவையைச் சுற்றியே எனது பணி இருந்துவருகின்றது என்றார் அவர்.
இந்நிலையில் அவர் தனது சக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பேசும்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உணர்ச்சி மற்றும் மன அழுத்தத்திற்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் நிதி சிக்கல்களும் ஒன்றாகும் என்றார். “வீட்டில் உள்ள எங்கள் குடும்பங்களில் பெரும்பாலானோர் நிதிச் சிக்கல்களைக் கொண்டிருப்பதால், நாங்கள் அயராது உழைக்கிறோம், மேலும் கூடுதல் வருமானத்திற்காக எப்போதும் அதிகமாக உழைக்கத் தயாராகவும் இருக்கிறோம். இது எங்கள் குடும்பத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த உதவும்” என்று ராகுல் கூறினார்.
இந்த நிலையில் தான் ராகுல் சிங்கப்பூரில் ஒரு Peer Support Leaderஆக தன்னை நிலையை உயர்திக்கொண்டார். மன அழுத்தத்தையும் கவலையையும் போக்க உணர்ச்சிபூர்வமான ஆதரவு எவ்வாறு உதவும் என்பதை அனுபவித்த ராகுல், மனிதவள அமைச்சகத்தால் (MOM) தொடங்கப்பட்ட Peer Support Network (PSN) முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தனது சக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு சக ஆதரவு தலைவராக மாற முடிவு செய்தார்.
இப்பொது மனரீதியாக கஷ்டப்படும் என் சக தோழர்களுக்கு என்னால் உதவ முடிகின்றது. எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த மனிதவள அமைச்சகத்திற்கும் எனது முதலாளி மற்றும் சக ஊழியர்களுக்கும் என்னால் இயன்றதை செய்வேன் என்று கூறியுள்ளார் பெருமாள் ராகுல் காந்தி.