சிங்கப்பூரில் 73 வயது முதியவரைக் கொன்றதாகக் கூறப்படும் 49 வயதான புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஏப்ரல் 29ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில் இதை சிங்கப்பூர் போலீசார் உறுதிசெய்தனர்.
நேற்று வியாழன் அன்று இரவு 8.50 மணியளவில் பிஷன் தெரு 23ல் உள்ள ஒரு குடியிருப்பு பிரிவில், ஒருவர் இறந்து கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்த நபர் உள்ளே அசையாமல் கிடந்ததை அதிகாரிகள் கண்டதாக கூறினார்.
மேலும் அங்கு வரவழைக்கப்பட்ட ஒரு துணை மருத்துவர் அவரை பரிசோதித்துப்பார்த்ததில் அவர் இறந்து விட்டதாகவும் அறிவித்தார். இந்த நிகழ்வு குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த வீட்டில் இருந்த வெளிநாட்டு பணிப்பெண்ணை கைது செய்தனர்.
இறந்தவரின் வீட்டில் பணிபுரியும் அந்த பணிப்பெண் நாளை சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரிக் வெளிநாட்டு பணிப்பெண் ஒருவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.