TamilSaaga

டெக்னாலஜியில் சிங்கப்பூரின் “அசுர பாய்ச்சல்”… விண்ணை அலங்கரிக்க ‘sustainable’ microsatellite அனுப்பும் சிங்கை

ஒரு மினி ஃப்ரிட்ஜ் அளவுள்ள மைக்ரோசாட்லைட்டை (சிறிய ரக செயற்கைகோள்) ஏவுவதன் மூலம் விண்வெளியில் உள்ள இன்னும் பல புதிய எல்லைகளை ஆராய சிங்கப்பூர் ஆயத்தமாகி வருகின்றது. நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NTU) செயற்கைக்கோள் ஆராய்ச்சி மையத்தின் தலைமையில், இந்த “முன்னோடி திட்டம்” மூலம் சுமார் 100 கிலோ எடைகொண்ட ரிமோட் சென்சிங் மைக்ரோசாட்லைட் விண்வெளியில் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

“அண்ணனை அங்கேயே எரிச்சிடுங்க”.. துபாயில் இறந்த வெளிநாட்டு தொழிலாளர்.. சற்றும் யோசிக்காமல் இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்

இந்தத் திட்டம் NTU, Aliena, LightHaus Photonics, ST பொறியியல் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் Temasek Laboratories ஆகியவற்றுக்கு இடையேயான ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தமாகும், என்று அந்த நிறுவனங்கள் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 9) வெளியிட்ட கூட்டறிக்கையாகும். சிங்கப்பூரின் தேசிய விண்வெளி அலுவலகமான விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அலுவலகமும் இதற்கு ஆதரவளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ST இன்ஜினியரிங் சேட்டிலைட் சிஸ்டம்ஸ், சிஸ்டம் மேம்பாடு மற்றும் மைக்ரோசாட்லைட்டின் உற்பத்தி குறித்து ஆலோசனை வழங்கும்.

இந்த புதிய மைக்ரோசாட்லைட் பூமிக்கு மேலே சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள மிகக் குறைந்த புவிவட்ட சுற்றுப்பாதையில் (VLEO) பறக்கும் என்று வெளியான அந்த கூட்டறிக்கையில் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டது. வழக்கமான செயற்கைக்கோள்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் குறைந்த புவி சுற்றுப்பாதை உயரத்தில் (500 கிமீ முதல் 800 கிமீ வரை) இது குறைந்தது பாதியாக இருப்பதால், பூமிக்கு நெருக்கமாக இருப்பதால் கருவிகள் சிறப்பாகச் செயல்படும் திறன் போன்ற “வேறுபட்ட திறன்களை” இது வழங்குகிறது.

எவ்வாறாயினும், VLEOல் பறப்பதில் உள்ள சவால்களில், செயற்கைக்கோள்கள் பொருத்தமான உந்துவிசை தொடர்ச்சியாக கிடைக்கவில்லை என்றால், சில நாட்களில் பூமியின் வளிமண்டலத்தை “டி-ஆர்பிட் செய்து கொண்டு மீண்டும் பூமியின் புவிவட்ட பாதைக்குள் வருவது போன்ற சிக்கல்கள் தோன்றும். இந்தச் சிக்கலைச் சமாளிக்க, NTU ஸ்பின்-ஆஃப் நிறுவனமான Aliena ஆல் “தனித்துவமான, எரிபொருள்-திறனுள்ள எஞ்சின்” வடிவமைக்கப்பட்டுள்ளது, இது “அயனிஸ் மற்றும் மந்த உந்துசக்தியை துரிதப்படுத்த உதவும்”, என்று செய்தி வெளியீடு கூறியது.

அசிங்கம்.. அருவருப்பு! – சிங்கப்பூரில் வேலைக்கு அப்ளை செய்த பெண்கள் பற்றி.. பிரபல நிறுவன ஊழியர்களின் அப்பட்டமான செக்ஸ் emails – கூண்டோடு சிக்கிய ஆதாரம்

லைட்ஹவுஸ் ஃபோட்டோனிக்ஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட சிங்கப்பூரின் முதல் விண்வெளி கேமராவையும் இந்த மைக்ரோசாட்லைட் தாங்கி செல்லும். 2011ம் ஆண்டு ஏவப்பட்ட சிங்கப்பூரின் முதல் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட செயற்கைக்கோளான X-SATல் உள்ள கேமராவை விட 20 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இது இருக்கும். விண்வெளியில் இருந்து 0.5 மீட்டர் அளவுக்கு சிறிய அளவிலான பொருட்களின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இந்த கேமராவால் எடுக்க முடியும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts