சிங்கப்பூர் வெள்ளி இன்று உலகின் மதிப்புமிக்க கரன்சிகளில் ஒன்றாக திகழ்கின்றது என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் அறிந்ததைவிட இன்னும் பல சுவாரசியமான விஷயங்களை உள்ளடக்கியது தான் நமது சிங்கப்பூர் கரன்சி. வாருங்கள் அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக இந்த பதிவில் காணலாம்.
மணிலா கேலியன்களால் கொண்டுவரப்பட்ட ஸ்பானிஷ்-அமெரிக்க வெள்ளியால் ஆனா டாலர் தான் ஆசியாவிலும் அமெரிக்காவிலும் 16 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை பரவலான புழக்கத்தில் இருந்தது. அதன்பிறகு 1845 முதல் 1939 வரை ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டில்மென்ட்ஸ் (இதில் சிங்கப்பூர் ஒரு பகுதியாக இருந்தது) அதன் உள்ளூர் ஸ்ட்ரெய்ட்ஸ் டாலரை வெளியிட்டது.
இந்நிலையில் சிங்கப்பூர் 1963ல் மலேசியாவுடன் இணைந்த பிறகு மேற்குறிப்பிட்ட அதே பொது நாணயத்தைத் தான பயன்படுத்தியது. ஆனால் 1965ல் சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டு மலேசியாவிலிருந்து சுதந்திரம் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு இடையேயான நாணயச் சங்கம் முறிந்தது.
அப்போது தான் சிங்கப்பூர் தனக்கென தனி நாணய ஆணையத்தை துவங்கியது, சரியாக சொல்லவேண்டும் என்றல் 7 ஏப்ரல் 1967 அன்று சிங்கப்பூர் நாணய ஆணையர் வாரியத்தை நிறுவி அதன் முதல் நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வெளியிட்டது.
சிங்கப்பூர் நாணயங்கள் குறித்து பார்க்கலாம்
சிங்கப்பூரில் மொத்தம் 5 வகை நாணயங்கள் உண்டு அவை 5 சென்ட், 10 சென்ட், 20 சென்ட், 50 சென்ட் மற்றும் 1 டாலர் ஆகியவை தான்.
அதே போல சிங்கப்பூர் டாலர் நோட்டுகளை பொறுத்தவரை 2 டாலர், 5 டாலர், 10 டாலர், 50 டாலர் மற்றும் 100 டாலர் ஆகியவை புழக்கத்தில் உள்ளன. இது தவிர ஏற்கனவே புழக்கத்தில் 1000 மற்றும் 10,000 டாலர் நோட்டுகள் சிங்கப்பூர் வரலாற்றில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் காரணசி என்ன பொருள் கொண்டு செய்யப்பட்டது தெரியுமா? அது தண்ணீரில் நனையுமா?
பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட பாலிப்ரோப்பிலீன் பிளாஸ்டிக் என்ற பொருளால் தான் சிங்கப்பூர் டாலர் நோட்டுகள் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இவை லேசாக தண்ணீரில் நனைக்கப்படும்போது சேதமடைவதில்லை.
Polymers என்ற பிளாஸ்டிக் தான் டாலர்கள் தண்ணீரில் நனையாமல் பாதுகாக்கின்றது, சிங்கை நோட்டுகளில் ஒளிந்திருக்கும் ரகசியமும் அதுதான். ஆனால் நோட்களை தண்ணீரில் நனைக்க வேண்டும் என்ற ஆசை எப்போதுமே எழவேண்டும், காரணம் எந்த நாடும் தங்கள் கரன்சிகளை பழுதாக்குவதை விரும்புவதில்லை.
அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை அங்கு உருவாக்கப்படும் ரூபாய் நோட்டுகள் முழுக்கமுழுக்க பருத்தி (cotton) மூலம் செய்யப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
அதே போல Vanda Miss Joaquim என்று அழைக்கப்படும் Orchid மலர்கள் சிங்கப்பூர் டாலர்களில் இடம்பெற்றிருக்கும். அதே போல சிங்கப்பூர் டாலர்கள் அனைத்திலும் தமிழ் உள்பட நான்கு மொழிகள் அச்சிடப்பட்டிருக்கும். காரணம் சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று.
சிங்கப்பூர் கரன்சியின் இன்னும் சில சிறப்புகள்
பிற நாட்டு கரன்சி போலவே சிங்கப்பூர் டாலரில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் வண்ணம் சில சிறப்பு அமைப்புகள் அளிக்கப்பட்டிருக்கும். பசுமை நகரமான சிங்கப்பூரில் சுமார் 200 ஆண்டுகால பழமையான மரம் ஒன்று இருப்பதை நாம் அறிவோம். அந்த மரத்தின் புகைப்படம் 5 டாலர் நோட்டில் இருப்பதை நம்மால் பார்க்கமுடியும்.