சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வேலை செய்யும் பணியாளர்களின் மகன் அல்லது மகள் சிங்கப்பூரில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பது உண்டு. அப்பா சிங்கப்பூரில் வேலை செய்வதால் அவர்களின் பிள்ளைகளுக்கு எளிதில் சிங்கப்பூரில் படிப்பதற்கு சீட் கிடைத்து விடும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறானதாகும்.
சிங்கப்பூரில் work pass அல்லது s pass அல்லது ஏதாவது ஒரு பாஸ் மூலம் பணியாற்றும் பணியாளர்களின் மகன் அல்லது மகள் சிங்கப்பூரில் PR பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, அவர்கள் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் கண்டிப்பாக 85 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு மதிப்பெண் பெற்றிருந்தால் சிங்கப்பூரில் உள்ள பல்கலைகழகங்கள், பாலிடெக்னிக் போன்றவற்றில் சேர்ந்து படிக்க ஏதாவது ஒரு கோர்ஸ் படிக்க விண்ணப்பம் செய்யலாம். அந்த பணியாளரின் மகன் அல்லது மகள், பத்தாம் வகுப்பு படித்து முடித்திருந்தால் கண்டிப்பாக சிங்கப்பூரில் உள்ள ஏதாவது ஒரு பாலிடெக்னில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கலாம். அதே போல் சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் சேர்ந்த படிக்க கண்டிப்பாக அதிக மதிப்பெண்களுடன் இந்தியாவில் 12 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் Foregin quota மூலம் சிங்கப்பூரில் படிக்க விண்ணப்பம் செய்ய முடியும். இது தவிர அவர்களின் தந்தை சிங்கப்பூரில் work pass மூலம் பணியாற்றி வருவதை தகுதியாக வைத்து அவர்களின் பிள்ளைகள் சிங்கப்பூரில் படிப்பதற்கு இடம் பெற முடியாது.