TamilSaaga

அதிகாலை… டிப்டாப் உடையில் சிங்கப்பூர் பாராளுமன்றத்துக்கு வெளியே சிறுநீர் கழித்த நபர் – வலைவீசி தேடும் போலீஸ்

சிங்கப்பூரில் ஒரு நபர் பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகியுள்ளது.

இன்று (ஜூன் 4) முகநூலில் வெளியான இந்த வீடியோவில் சிங்கை பாராளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு வெளியே ஒரு நபர் சிறுநீர் கழிப்பது பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் ஜூன் 4 ஆம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் நடந்ததாகத் தெரிகிறது.

அந்த வீடியோவை வைத்து பார்க்கையில், சிங்கப்பூர் பாராளுமன்ற கட்டிடத்தின் பிரமாண்டமான நுழைவாயிலுக்கு வெளியே வடக்கு பாலம் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

தன்னை வீடியோ எடுப்பது தெரிந்ததோ, இல்லையோ.. ஆனால் அந்த நபர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஹாயாக சிறுநீர் கழித்துவிட்டு நடந்து சென்றார். அந்த நபர் தெளிவான மனநிலையில் இதை செய்தாரா அல்லது போதையில் இருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் படிக்க – “வெயில்ல நின்னு சாகுறோம்; எல்லாம் தலையெழுத்து” – சிங்கையில் சுட்டெரிக்கும் வெயிலால் ஜீவனை இழக்கும் “Construction” துறை ஊழியர்கள்

சிறுநீர் முழுவதும் கழித்து தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு, அந்த நபர் சப்தம் போடாமல் அமைதியாக அங்கிருந்து நடந்து சென்றார். அந்த வழியாக சென்ற கார்கள் அவரைக் கடந்து சென்றபோதும் அவர் சிறுநீர் கழித்த அடையாளத்தை மறைக்கவோ, தன்னை தற்காத்துக் கொள்ளவோ அவர் மெனக்கடவில்லை.

எனினும், அந்த நபர் சிறுநீர் கழிப்பதை முழுவதும் வீடியோ எடுத்த நபர், ஏன் அவரின் முகத்தை மட்டும் படம் பிடிக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அந்த காட்சிகளை பதிவு செய்த நபர், அந்த நபரின் அந்தரங்க உறுப்புகளை வீடியோவில் எடுக்க விரும்பவில்லை என்றும், அதற்கு பதிலாக நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பல சிசிடிவிகள் அந்த நபரை அடையாளம் காண உதவும் என்று நம்புவதாகவும் பதிலளித்தார்.தற்போது காவல்துறை அந்த நபரை தீவிரமாக தேடி வருகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts