TamilSaaga

“கிரேனில் சிக்கிக்கொண்ட காயமடைந்த தொழிலாளி” : SCDF படை காப்பாற்றியது எப்படி? – வீடியோ உள்ளே

சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்து காரணமாக கிரேனில் இருந்து கீழே இறங்க முடியாமல் காயமடைந்த நிலையில் இருந்த ஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) இரவு தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக கீழே இறக்கினர். சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவின் (DART) நிபுணர்கள் கடற்கரை சாலையில் உள்ள கட்டுமானத் தளத்திற்கு இரவு 8.45 மணியளவில் அனுப்பப்பட்டனர் என்று SCDF இன்று சனிக்கிழமையன்று தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

ஆரம்பத்தில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் ஒரு ஏணியில் ஏறி ஒரு மேடையில் படுத்திருந்த காயமடைந்த தொழிலாளரை மீட்க முயன்றனர். ஆனால் அந்த நபரின் கால் உடைந்திருக்கலாம் என்று மதிப்பிட்டு, மீட்பு நடவடிக்கைக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக காயமடைந்த மூட்டுக்கு கட்டு மற்றும் பிற உபகரணங்களை கொண்டுசென்றனர்.

SCDF வெளியிட்ட மீட்பு காணொளி

SCDF வெளியிட்ட மீட்பு புகைப்படங்கள்

இரண்டு DART நிபுணர்கள் பின்னர் கிரேன் மீது ஏறினர், 70 மீட்டர் உயரத்தை அந்த கிரேன் எட்டியது, இருவரும் கயிறுகள் மற்றும் கப்பிகளை உள்ளடக்கிய உயரத்தைக் குறைக்கும் அமைப்பை அமைத்தனர், அதே நேரத்தில் மற்றொரு குழுவான DART நிபுணர்கள் காயமடைந்த தொழிலாளியைப் தரையில் உள்ள பகுதியில் இறக்கியதும் உதவ தயாராக இருந்தனர்.

பின்னர் அவர் ஒரு பவர் அசென்டரைப் பயன்படுத்தி ஸ்ட்ரெச்சரில் இறக்கப்பட்டார், இது ஒரு கையடக்க சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காயமடைந்த தொழிலாளி தரையில் இறக்கப்பட்டதும் SCDF ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பும் முன் அவர் உடல் நிலையை மதிப்பீடு செய்தனர்.

Related posts