TamilSaaga

சிங்கப்பூரில் விதியை மீறி “Car Pooling” சேவை : 52 வயது நபருக்கு 3 நாள் சிறை – வாகனம் ஓட்ட தற்காலிக தடை

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பெருந்தொற்றின் “சர்க்யூட் பிரேக்கரின்” போது “கார்பூலிங்” சேவைகளை வழங்கிய ஒருவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) மூன்று நாட்கள் சிறைத்தண்டனையும் S$1,800 அபராதமும் விதிக்கப்பட்டது. 52 வயதான ஜுஹாரி சுபாரி, மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் சர்வதேச புலம்பெயந்தோர் தினம்”

போக்குவரத்து சேவைகளை வழங்க உரிமம் இல்லாத வாகனத்தைப் பயன்படுத்துவது மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்ல முறையற்ற காப்பீடு செய்யப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்துவது ஆகிய குற்றங்கள் இதில் அடங்கும். மேலும் அவர் 12 மாதங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். குற்றங்கள் நடந்த நேரத்தில் ஜூஹாரி SP குழுமத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிங்கப்பூரில் பெருந்தொற்று பரவல் காரணமாக சமூகக் கூட்டங்கள் மற்றும் பல அத்தியாவசியமற்ற நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, சர்க்யூட் பிரேக்கருக்கு மத்தியில் வீட்டிலிருந்து பணிபுரியும் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்தார் அவர்.

இந்நிலையில் கார் பூலிங் சேவையை வழங்க முடிவு செய்த அவரது வாகனத்தில் இரண்டு ஆண் நபர்கள் ஏறினார்கள். மேலும் தங்கள் பயணத்திற்காக பணத்தை அவருக்கு ரொக்கமாக செலுத்தினார்கள். அவர்கள் அந்த காரில் பயணம் செய்துகொண்டிருந்த நேரத்தில் மாலை 5.25 மணியளவில், LTA அமலாக்க அதிகாரி ஒருவர் Yio Chu Kang சாலையில் அவரது காரை நிறுத்தினார்.

வழக்கறிஞரின் கூற்றுப்படி, ஜுஹாரி அந்த பயணிகளிடம் அவர்கள் தனது நண்பர்கள் என்று LTA அதிகாரியிடம் சொல்லச் சொன்னார். ஆனால் அதிகாரி அவர்களின் பெயர்களைக் கேட்டபோது, ​​ஜுஹாரியால் தகவலை வழங்க முடியவில்லை. அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts