எல்லா ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் நினைவுகூரப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம். MOM வெளியிட்ட தனது முகநூல் பதிவில் “சிங்கப்பூரில் இந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி அன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை நினைவுகூர உள்ளோம். தொலைதூரத்தில் இருந்து வந்திருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நமது பாராட்டுக்களை தெரிவிப்போம்” என்று கூறியுள்ளது.
இதையும் படியுங்கள் : இனி VTL மூலம் சிங்கப்பூர் வரப் பதிவு செய்ய அனுமதி இல்லை – MOM
“அடுத்த இரண்டு வாரங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் சிலரின் கதைகள் மற்றும் எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நாங்கள் வரிசைப்படுத்திய கொண்டாட்டங்களை வெளியிடவுள்ளோம்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ஒன்றாக, நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நமது பாராட்டுகளை தெரிவிப்போம்” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த இணைப்பின் மூலம் எங்களிடம் கூறுங்கள்*, முதல் 10 உள்ளீடுகளுக்கு 50 மதிப்புள்ள உணவு வவுச்சர்களை வழங்கப்படும்” என்றும் MOM தெரிவித்துள்ளது.