TamilSaaga

சிங்கப்பூருக்குள் கஞ்சா கடத்திய 41 வயது நபர் : நிராகரிக்கப்பட்ட மேல்முறையீடு – மரண தண்டனை விதிப்பு

கடந்த செவ்வாயன்று, சிங்கப்பூரின் உயர் நீதிமன்றம், அண்டை நாடான மலேசியாவில் இருந்து மாநிலத்திற்குள் குறைந்தபட்சம் 2.2 பவுண்டுகள் எடையுள்ள கஞ்சாவை கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டை தற்போது நிராகரித்துள்ளது. உமர் யாக்கோப் பாமதாஜ் என்ற அந்த 41 வயது நபரிடம், கடந்த 2018ல் வழக்கமான எல்லை சோதனைச் சாவடிகளின்போது, ​​அவரது காரில் இருந்த போதைப்பொருளின் மூன்று மூட்டைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் பிறகு நடந்த விசாரணையில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் அந்த காரில் இருந்த அவரது தந்தைக்கு, தனது மகன் கடத்தி வந்த போதைப்பொருள் பற்றி தெரியாது என்ற காரணத்தால், அவர் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. விசாரணையில் உமர் தரவு வாதங்களில் அந்த முட்டைகளில் என்ன இருந்தது என்று தனக்கு தெரியாது என்றும், அவரது நண்பர்கள் தின் மற்றும் லத்தீப், தனக்கு தெரியாமல் தனது வண்டியில் அந்த பொட்டலங்களை வைத்ததாக அவர் கூறினார்.

சிங்கப்பூர் அரசு சட்டவிரோத போதைப்பொருட்கள் மீது சகிப்புத்தன்மையற்ற நிலைப்பாட்டை பராமரிக்கிறது. மற்றும் சமீபத்திய காலங்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காக பல வெளிநாட்டு குடிமக்கள் உட்பட நூற்றுக்கணக்கான நபர்களை தூக்கிலிட்டுள்ளது சிங்கப்பூர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஒரு சிங்கப்பூரர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி ஜூம் கால் மூலம் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts