சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் இருந்த ஒருவர் காபி பவுடர் தொடர்பாக சக கைதியுடன் தகராறில் ஈடுபட்டு அவருடைய காதின் ஒரு பகுதியை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 56 வயதான தியோ சாய் லைக்கு தனது சகா கைதியின் காதை கடித்ததற்காக இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) மேலும் 10 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிறைவாசத்தின் முடிவில் அவர் இந்த கூடுதல் சிறைவாசத்தை அனுபவிப்பார்.
கடந்த டிசம்பர் 15, 2020 அன்று சாங்கி சிறைச்சாலையின் B3ன் நிலை 5ல் உள்ள பட்டறையில், 53 வயதான லிம் லீ யாட் உடன், தியோ இருந்தார் என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் சாங்கி சிறைச்சாலையின் மேற்பார்வையின் கீழ் அவர்கள் காபி சாச்செட்டுகளை பேக்கிங் செய்துகொண்டிருந்தபோது, டீயோ தனது கையைப் பயன்படுத்தி கொட்டப்பட்ட காபி கலவையை பாதிக்கப்பட்டவரின் பக்கத்தில் தள்ளியுள்ளார்.
இதனையடுத்து இதன் விளைவாக பாதிக்கப்பட்டவர் அதிக வேலை செய்ய வேண்டும் மற்றும் அதிக தொகுப்புகளை தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக அந்த இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. பாதிக்கப்பட்டவர் தியோவின் முகத்தில் குத்தினார், உடனடியாக தியோவும் பதிலடி கொடுத்தார். இறுதியில் பாதிக்கப்பட்டவரின் இடது காதுகளின் மேல் பகுதியில் தியோ பலமாக கடித்தார்.
இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவரின் இடது பக்க காதின் ஒரு பகுதி முழுவதுமாக கடிக்கப்பட்டது. தியோவின் குத்துகளால் பாதிக்கப்பட்டவரின் கண் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தியோவிற்கு ஏற்கனவே அனுபவிக்கும் சிறைத்தண்டனை முடியும் நேரத்தில் கூடுதலாக 10 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்.