TamilSaaga

பிரான்ஸ் நாட்டில் மூன்றாவது தடுப்பூசி : யாருக்கு வழங்கப்படும்? – விளக்கமளித்த ஜனாதிபதி

சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய இந்த நோய்த்தொற்று தற்போது உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. 1.5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னும் இந்த நோய்க்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. இருப்பினும் மக்களை காக்க பல நாட்டு அரசுகளும் அவர்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பெருந்தொற்றில் இருந்து தப்பிக்க தற்போது உள்ள ஒரே வழியாக கண்டறியப்பட்டுள்ளது தடுப்பூசிகள் மட்டுமே, இந்நிலையில் உலகின் சில நாடுகள் இரண்டு பெருந்தொற்று தடுப்பூசிகளை தொடர்ந்து மூன்றாவது தடுப்பூசியும் போட முடிவு செய்துள்ளது. அப்படி முடிவெடுத்துள்ள நாடுகளில் பிரான்சும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஜனாதிபதி இம்மானுவேல் கூறுகையில் வருகின்ற புதிய கல்வி ஆண்டில் இருந்து மூன்றாவது தடுப்பூசி போடப்படும் பணியும் ஆரம்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். இருப்பினும் இந்த மூன்றாவது தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படமாட்டாது என்றும். எளிதில் தொற்றுக்கு ஆளாக கூடியவர்களுக்கு மட்டுமே இந்த மூன்றாவது தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

உலக அளவில் பல நாடுகளில் தற்போது மூன்றாவது தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts