TamilSaaga

“தற்காப்புக்காக சுட்டுப்பிடித்தோம்” : போலீசாரை தாக்க வந்த நபர் – களேபரமான சிங்கப்பூர் சாலை, பரபரப்பை ஏற்படுத்திய Video

சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) அதிகாலையில் க்ளெமெண்டி பகுதி காவல் நிலையத்திற்கு வெளியே, கத்தியை ஏந்தி நின்ற நபர் ஒருவர் போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பரவும் இந்த சம்பவத்தின் வீடியோவில், கிளெமென்டி Ave 5ல் உள்ள போலீஸ் மையத்தை நோக்கி அந்த நபர் தனது கையில் கத்தியைப் போலத் தோன்றும் ஒரு பொருளை கொண்டு முன்னேறிய நிலையில், போலீஸ் அதிகாரிகள் அவரை நோக்கி துப்பாக்கிகளை நீட்டியவாறு தெருவைக் கடப்பதைக் காணமுடிந்தது.

இணையத்தில் வைரலாக பரவிய அந்த வீடியோ

உருளும் தலைகள்! சிங்கப்பூரின் PSP கட்சிக்கு பெரும் பின்னடைவு.. பதவி விலகும் முக்கிய புள்ளி “குமரன் பிள்ளை”

அதன் பின்னர் யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கையை ஓங்கியபடி அந்த நபர் ஒரு காவல்துறை அதிகாரியை நோக்கி ஓட, வேறு வழியின்றி அந்த காவலர் அவரை நோக்கி சுடுகிறார். அந்த நபர் தரையில் சுருண்டு விழுந்த நிலையில் அனைத்து போலீசாரும் அந்த நபரின் அருகில் சென்று அவரை கைது செய்தனர். “கிரிமினல் குற்றம், மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து ஆபத்தான ஆயுதம் மூலம் காயம் ஏற்படுத்திய வழக்கில். சந்தேகத்தின் பேரில் அந்த 49 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்” என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழன் அன்று இரவு 8.40 மணியளவில் பிளாக் 420A Clementi Avenue 1ல் 41 வயதுடைய நபர் ஒருவரை கைதானவர் கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். வலது கை மற்றும் மணிக்கட்டில் காயம் அடைந்த அந்த பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரும், தாக்கியவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் அல்ல என்று தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு, அந்த சந்தேக நபர் ஒரு டாக்ஸியில் ஏறி கிளமென்டி போலீஸ் பிரிவுக்கு சென்று கத்தியை கையில் ஏந்தியபடி காவல் நிலையத்திற்கு வெளியே நின்றுள்ளார். அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அவரை அணுகியபோது, ​​அந்த நபர் காரணமில்லாமல் கத்திக் கொண்டிருந்ததை அவர்களால் காண முடிந்தது. “கத்தியை கீழே போடுமாறு அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்திய போதிலும், அந்த நபர் போலீசாரின் வாய்மொழி எச்சரிக்கைக்கு இணங்க மறுக்க போலீசார் ஒருவர் தனது சர்வீஸ் ரிவால்வரால் அந்த நபரை நோக்கி ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் “காதல்” எனும் பெயரில் நடக்கும் “காமக்களியாட்டம்”.. இந்தோனேசிய பெண்களிடம் சிக்கும் இந்திய தொழிலாளர்கள்

“கத்தியை ஏந்தி நின்ற நபரால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்ந்ததால் மட்டுமே அவரை சுட்டதாகவும் கிளெமென்டி போலீஸ் பிரிவு அதிகாரி மார்க் (உதவி போலீஸ் கமிஷனர்) கூறினார். அந்த 49 வயதான சந்தேக நபர் மீது பொது ஊழியரை மிரட்டியது மற்றும் ஆபத்தான ஆயுதம் மூலம் தானாக முன்வந்து காயப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக இன்று நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்படும். கிரிமினல் மிரட்டல் குற்றத்திற்காக, அவர் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற வாய்ப்புகள் உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts